முகப்பு
செய்திகள்

ஜூனியர் கூடைப்பந்து: கோவை சாம்பியன்

தமிழ்நாடு மாநில ஜூனியர் மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் கோவை அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

Updated On : 11 ஜூன், 2025 at 5:11 AM
பகிர்:

சென்னை: தமிழ்நாடு மாநில ஜூனியர் மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் கோவை அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம், சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் மாநில ஜூனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டிகள் காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் வளாகத்தில் நடைபெற்றன.

ஆடவர் பிரிவு போட்டிகளைத் தொடர்ந்து மகளிர் போட்டி கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் இறுதி ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Advertisement

இறுதி ஆட்டத்தில் கோவை அணி 90-87 என்ற புள்ளிக் கணக்கில் கடும் சவாலுக்குபின் தூத்துக்குடி ஏ அணியை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றியது.

3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் சென்னை ஏ அணி 59-48 என்ற புள்ளிக் கணக்கில் சேலம் அணியை வீழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.