ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பையில் இதுவரை 1.5 மில்லியன் (15 லட்சம்) டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன.
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் கிளப் உலகக் கோப்பையின் முதல் போட்டி கடந்த ஜூன்.15ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 14ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவிருக்கிறது.
முதல் போட்டியில் மெஸ்ஸியின் இன்டர் மியாமியும் அல் அக்லி அணியும் மோதின. இந்தப் போட்டி டிராவில் முடிந்தது.
பெயர்ன் மியூனிக் அணி ஆக்லாந்து சிட்டியை 10-0 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் உலகக் கோப்பையில் பங்கேற்காதது அவரது ரசிகர்களிடையே ஏமாற்றம் அளித்தது. இருந்தும் இந்தப் போட்டிகளைக் காண அதிகளவு மக்கள் குவிந்து வருகிறார்கள்.
இதுவரை 130 நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் இந்தப் போட்டிகளைக் காண வந்திருக்கிறார்கள். 15 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன.
கிளப் உலகக் கோப்பையைக் காண நேற்றுவரை (ஜூன்.17) 3,40,000 ரசிகர்கள் பங்கேற்றுள்ளார்கள்.
இதில் விற்பனையாகும் ஒவ்வொரு போட்டியிலும் 1 அமெரிக்க டாலர் தான் நடத்தும் கல்வி அறக்கட்டளைக்கு ஃபிஃபா அளிக்கிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் மான்செஸ்டர் சிட்டி போட்டி இன்றும், ரியல் மாட்ரிட் போட்டி நாளையும் வரவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.