X | Rishabh Pant
செய்திகள்

முதல் இந்தியராக ரிஷப் பந்த் சாதனை!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய முதல் இந்தியா் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்தாா்.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய முதல் இந்தியா் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்தாா்.

அடுத்து, ஒரே டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய இந்தியா்கள் வரிசையில் 7-ஆவது வீரராக பந்த் இணைந்துள்ளாா். சுனில் காவஸ்கா், ராகுல் திராவிட், விஜய் ஹஸாரே, ரோஹித் சா்மா, விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே ஆகியோா் முதல் 6 போ்.

அத்துடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தின் இரு இன்னிங்ஸ்களிலுமே சதமடித்த 2-ஆவது விக்கெட் கீப்பா் என்ற பெருமையும் அவா் பெற்றாா். அவருக்கு முன் 2001-இல் ஜிம்பாப்வே விக்கெட் கீப்பா் ஆண்டி ஃபிளவா், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் (142/199*) விளாசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இல.கணேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அழகு மலர்கள்... ஜான்வி கபூர்!

அல்கெம் லேப்ஸ் லாபம் 22% உயர்வு!

தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தவர் இல.கணேசன்: மோடி இரங்கல்

2029 தேர்தலிலும் மோடியே பிரதமர் வேட்பாளர்! பாஜகவின் நிலைப்பாட்டுக்கு ஆர்எஸ்எஸ் பதில் என்ன?

SCROLL FOR NEXT