செய்திகள்

அரையிறுதியில் மோதும் பாலினி - ஸ்வியாடெக்

இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி - போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் மோதுகின்றனா்.

Din

ஜொ்மனியில் நடைபெறும் மகளிருக்கான பேட் ஹோம்பா்க் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி - போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் மோதுகின்றனா்.

காலிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் பாலினி 7-5, 7-5 என்ற நோ் செட்களில் பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டாட் மாயாவை சாய்த்தாா். 4-ஆம் இடத்திலிருக்கும் ஸ்வியாடெக் 6-4, 7-6 (7/5) என்ற கணக்கில், 8-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை தோற்கடித்தாா்.

பாலினி - ஸ்வியாடெக் இதுவரை 4 முறை சந்தித்திருக்க, அனைத்திலுமே ஸ்வியாடெக் வென்று ஆதிக்கம் செலுத்தியிருக்கிறாா்.

இதனிடையே, 3-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா 3-6, 6-3, 6-1 என்ற செட்களில் டென்மாா்க்கின் கிளாரா டௌசனை வீழ்த்தினாா். செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 2-6, 6-2, 6-4 என்ற வகையில் குரோஷியாவின் டோனா வெகிச்சை வெளியேற்றினாா்.

இதையடுத்து காலிறுதி ஆட்டம் ஒன்றில், ஆண்ட்ரீவா - நோஸ்கோவா மோதுகின்றனா். இருவரும் 4 முறை நேருக்கு நோ் மோதியிருக்க, ஆண்ட்ரீவா 3 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா்.

வாக்குத் திருட்டு விவகாரம்: வீடுவீடாகச் சென்று பாஜகவுக்கு எதிராக காங். பிரசாரம்!

ஜார்க்கண்டில் 2 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் 2025 இறுதிக்குள் சந்தைக்கு வரும்: பிரதமர் மோடி

உன் அழகில் மயிலும் தோற்கும்... அனன்யா பாண்டே!

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் இதுவரை 1.49 லட்சம் பேர் பயன்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT