X | Cristiano Ronaldo
செய்திகள்

அல்-நசீர் அணியிலேயே 2 ஆண்டு ஒப்பந்தம் நீட்டிப்பு! ரொனால்டோ அறிவிப்பு!

சௌதி லீக்கில் அல்-நசீர் அணியிலேயே 2 ஆண்டு ஒப்பந்தத்தை கிறிஸ்டியானோ ரொனால்டோ நீட்டித்துள்ளார்.

DIN

சௌதி லீக்கில் அல்-நசீர் அணியிலேயே 2 ஆண்டு ஒப்பந்தத்தை கிறிஸ்டியானோ ரொனால்டோ நீட்டித்துள்ளார்.

உலக கால்பந்து ஜம்பவான் என்றழைக்கப்படும் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சௌதி லீக்கில் அல்-நசீர் அணியின் ஒப்பந்தத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. அதே ஆர்வம், அதே கனவு. ஒன்றாக இணைந்து வரலாற்றை உருவாக்குவோம் என்று பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம், அவரின் முந்தைய சாதனைகளை அவரே முறியடிக்கவுள்ளார்.

கடந்த மாதம், சௌதி சீசனின் முடிவில் அத்தியாயம் முடிவடைந்ததாக ரொனால்டோ கூறியிருந்த நிலையில், தற்போது புதிய அத்தியாயம் குறித்து அறிவித்துள்ளார்.

2027 வரையில் அல்-நசீர் அணிக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ள அவருக்கு ஓராண்டுக்கு 200 மில்லியன் டாலர் வரையில் வழங்கப்படுகிறது.

கடந்தாண்டில் மட்டும் மொத்தமாக 275 மில்லியன் டாலர்கள் (ரூ. 2,355 கோடி) ரொனால்டோ சம்பாதித்ததாக ஃபோர்ப்ஸ் அறிக்கை கூறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு துறைகள் ஒதுக்கீடு!

SCROLL FOR NEXT