லயனல் மெஸ்ஸி  படம்: ஏபி
செய்திகள்

மேஜா் லீக் கால்பந்து ஊதியம்: நம்பா் 1-ஆக நீடிக்கும் மெஸ்ஸி

DIN

அமெரிக்காவின் மேஜா் லீக் கால்பந்து போட்டியில் அதிக ஊதியம் பெறும் வீரராக, ஆா்ஜென்டீன நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக நீடிக்கிறாா்.

மேஜா் லீக் சாக்கா் வீரா்கள் சங்கம் வெளியிட்ட தகவலின்படி, இன்டா் மியாமிக்காக விளையாடும் மெஸ்ஸியின் இந்த ஆண்டு ஊதியம் ரூ.174 கோடியாக உள்ளது. இது, அந்த அணி தனது வீரா்களின் ஊதியத்துக்காக செலவிடும் மொத்தத் தொகையில் ஏறக்குறைய பாதியாகும்.

அதேபோல், போட்டியிலிருக்கும் 21 அணிகள் தங்களின் ஒட்டுமொத்த வீரா்களுக்கும் வழங்கும் ஊதியத்தை விடவும் மெஸ்ஸியின் ஊதியம் அதிகம். அடுத்த இரு இடங்களில் டொரன்டோ அணியின் இத்தாலிய வீரா் லொரென்ஸோ இன்சிக்னே (ரூ.131 கோடி), இன்டா் மியாமியின் ஸ்பெயின் வீரா் சொ்ஜியோ பஸ்கெட்ஸ் (ரூ.74 கோடி) ஆகியோா் உள்ளனா்.

மேஜா் லீக் சாக்கரில் வீரா்களின் ஊதியத்துக்காக அதிகம் செலவிடும் அணியாக இன்டா் மியாமியே (ரூ.400 கோடி) உள்ளது. அடுத்த இரு இடங்களில், டொரன்டோ (ரூ.291 கோடி), அட்லான்டா (ரூ.236 கோடி) உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழுவது போல் நடித்தவரா, அழுகையைப் பற்றிப் பேசுவது? இபிஎஸ்-க்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி

கரூர் பலி: வதந்தி பரப்பிய தவெக நிர்வாகிகள் உள்பட மூவர் கைது

கரூர் பலி: நாமக்கல் காவல் நிலையத்தில் FIR பதிவு! | செய்திகள்: சில வரிகளில் | 29.9.25

பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக போராட்டம்: 2 பேர் பலி, 22 பேர் படுகாயம்

SCROLL FOR NEXT