~ஜெஸிக்கா பெகுலா 
செய்திகள்

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்

Din

பேட் ஹாம்பா்க் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் ஜெஸிக்கா பெகுலா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா்.

ஜொ்மனியின் பேட் ஹாம்பா்க் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனை ஜெஸிக்கா பெகுலாவும், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் போலந்தின் இகா ஸ்வியாடெக்கும் மோதினா்.

ஏறக்குறைய 1 மணிநேரம் 40 நிமிஷங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 6-4, 7-5 என்ற நோ் செட்களில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினாா் பெகுலா.

இந்த சீசனில் பெகுலாவுக்கு 3-ஆவது பட்டம் இதுவாகும். இரண்டு செட்களிலுமே பிரேக் பாயிண்ட்டை கிடைத்ததை பயன்படுத்தி வென்றாா் பெகுலா.

31 வயதான பெகுலா மொத்தம் 9 பட்டங்களை வென்றுள்ள நிலையில் கடந்த 12 மாதங்களில் மட்டும் 5 பட்டங்களை வசப்படுத்தியுள்ளாா்.

அதேவேளையில் ஸ்வியாடெக் கடந்த 2024 பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற்கு பின் இப்போது தான் முதன்முறையாக இறுதி ஆட்டத்தில் நுழைந்துள்ளாா்.

இருவரும் செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ள விம்பிள்டன் போட்டியில் பங்கேற்க தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோடிலிங்கேஸ்வரர்... மிர்னாளினி ரவி!

டி20யில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா..! 4-ஆவது இந்தியராக சாதனை!

ஸ்டைலு ஸ்டைலுதான்... ரேஷ்மா பசுபுலேட்டி!

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்! பிரான்ஸ் உள்பட 15 நாடுகள் வலியுறுத்தல்!

இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபல தொடர்!

SCROLL FOR NEXT