முகப்பு
செய்திகள்

பிரேசில் அணியில் இணைந்த கால்பந்து உலகின் இளவரசன் நெய்மர்..! ரசிகர்கள் உற்சாகம்!

பிரபல கால்பந்து வீரர் நெய்மர் பிரேசில் அணியில் 17 மாதங்களுக்குப் பின் இணைந்துள்ளார்.

Updated On : 7 மார்ச் 2025, 12:41 pm IST
நெய்மர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த புகைப்படம். - படம்: இன்ஸ்டா / நெய்மர், என்.ஆர்.ஸ்போர்ட்ஸ்
பகிர்:

பிரபல கால்பந்து வீரர் நெய்மர் பிரேசில் அணியில் 17 மாதங்களுக்குப் பின் இணைந்துள்ளார்.

பிரேசிலைச் சேர்ந்த நெய்மர் கால்பந்து உலகின் இளவரசன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். மெஸ்ஸி, ரொனால்டாவுக்குப் பிறகு அதிக ரசிகர்களைக் கொண்டவர் நெய்மர்.

சௌதி லீக்கில் இருந்து வெளியேறிய நெய்மர் தற்போது தனது சிறுவயது அணியான சன்டோஷ் அணியில் விளையாடி வருகிறார்.

Advertisement

Advertisement

காயம் காரணமாக பல போட்டிகளை விளையாடமல் இருந்த நெய்மர் தற்போது சன்டோஷ் அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

சுமார் 17 மாதங்களுக்குப் பிறகு பிரேசில் தேசிய அணியில் நெய்மர் இணைந்துள்ளார்.

பிரேசில் அணிக்கு அதிக கோல்கள் அடித்தவர் நெய்மர் என்பது குறிப்பிடத்தக்கது. பீலேவுக்கு பிறகு பிரேசில் மக்களால் அதிகம் கொண்டாடப்படுவராக இருக்கிறார் நெய்மர்.

உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் கொலம்பியா, ஆர்ஜென்டீனா அணியுடன் பிரேசில் மோதவிருக்கிறது.

33 வயதாகும் நெய்மர் பிரேசில் அணிக்காக 128 போட்டிகளில் 79 கோல்கள் அடித்துள்ளார்.

இந்த அறிவிப்பினால் நெய்மர் இல்லாமல் தவிக்கும் பிரேசில் அணியும் அந்நாட்டு ரசிகர்களும் தற்போது மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

நெய்மர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த புகைப்படம். - படம்: இன்ஸ்டா / நெய்மர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.