1,000 மீ. ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாதனை படம்: யூடியூப் / இந்திய தடகள கூட்டமைப்பு
செய்திகள்

தேசிய இளையோர் தடகளம்: 1,000 மீ. ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாதனை!

1,000 மீ. ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாதனை நிகழ்த்தினார் உத்தரகண்ட் வீரர்.

DIN

தேசிய இளையோர் தடகளம் சாம்பியன்ஷிப்பில் 1,000 மீ. ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாதனையை நிகழ்த்தினார் உத்தரகண்ட் வீரர் சுராஜ் சிங்.

20-ஆவது தேசிய இளையோர் தடகளம் சாம்பியன்ஷிப்பில் யு-18 பிரிவில் படில்புரா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் திடலில் இறுதிநாள் போட்டிகள் இன்று நடைபெற்றது.

இதில் 1,000 மீ. ஓட்டப் பந்தயத்தில் புதிய தேசிய சாதனை நிகழ்த்தப்பட்டது. உத்தரகண்ட்டைச் சேர்ந்த சுராஜ் சிங் 2:26.04 வினாடிகளில் 1,000 மீட்டரைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பாக 2010இல் 2:27.20 வினாடிகளில் 15 வயது ராகுல் பால் ஓடியிருந்ததே தேசிய சாதனையாக இருந்து வந்தது. தற்போது, இந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

1,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாதனை படைத்தவர்கள்

1. சுராஜ் சிங் - 2:26.04

2. விகாஷ் குமார் - 2:26.59

3. ராகுல் பால் - 2:27.20

4. சோஜித் விஜேந்தர் - 2:27.27

5. முகது நூரூதின் - 2:28.89

யு-18 ஆண்கள்

200 மீ: சயித் சபீர் (கர்நாடகம்) 21.67 வினாடிகள்.

1,000 மீ: சுரஜ் சிங் (உத்தரகண்ட்) 2:26.04 வினாடிகள்.

நீளம் தாண்டுதல்

சிவம் யாதவ் (உத்தரப் பிரதேசம்)- 7.26 மீ.

ராஜிவ் ராய் (மே.வங்கம்) - 7.12 மீ.,

பிரதீப் குமார் (பிகார்) -6.69மீ.

ஈட்டி எறிதல்

ஹிமன்சு (ஹரியாணா) - 72.00 மீ.

கிரிஷன் சந்திரா (ம.பி.) - 66.77 மீ.

பிரின்ஸ் ஜடிவால் (ஹரியாணா) - 65.36 மீ.

U-18 பெண்கள்

200 மீ: பிரிஷா மிஸ்ரா (ஹரியானா) 24.72 வினாடிகள், ஆர்த்தி (ஹரியானா) 24.73 வினாடிகள், பூமிகா நேஹடே (மகாராஷ்டிரா) 24.99 வினாடிகள்.

1,000 மீ ஓட்டம்:

நந்தனி ராஜ்பர் (உத்தரப் பிரதேசம்) - 2:55.68 வினாடிகள் ஜான்ஹவி ஹிருத்கர் (மகாராஷ்டிரம்) - 2:56.54 வினாடிகள் முஸ்கான் (ஹரியானா) 2:58.98 வினாடிகள்

ஈட்டி எறிதல்

மிஸ்டி கர்மாகர் (மேற்கு வங்கம்) - 45.04 மீ.

சியா பஞ்சாரா (ராஜஸ்தான்) -41.82 மீ.

தனுஷ்ரி மஹால்டர் (மே.வங்கம்) -41.73 மீ.

உயரம் தாண்டுதல்

அஞ்சல் பாட்டீல் (மகாராஷ்டிரம்) - 1.68 மீ.

ரிங்கு கோஷ் (மேற்கு வங்கம்) - 1.65 மீ.

ஹர்ஷிதா பி (கர்நாடகம்) - 1.60 மீ.

ஹெப்டத்லான்

அனாமிகா அஜேஷ் (கேரளம்)- 4270 புள்ளிகள்

பாடி வைஷாலி (தெலுங்கானா) - 4224 புள்ளிகள்

ஹர்ஷிதா பி (கர்நாடகம்) - 4128 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

SCROLL FOR NEXT