லியோனல் மெஸ்ஸி... படம்: ஏபி
செய்திகள்

உலகக் கோப்பை தகுதிச் சுற்று: 2 போட்டிகளில் இருந்து விலகிய மெஸ்ஸி!

ஆர்ஜென்டீனாவின் கேப்டன் மெஸ்ஸி உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் முக்கியமான 2 போட்டிகளிலிருந்து விலகல்.

DIN

ஆர்ஜென்டீனாவின் கேப்டன் மெஸ்ஸி உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் முக்கியமான 2 போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022இல் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி வென்றது.

37 வயதாகும் லியோனல் மெஸ்ஸி தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.

உருகுவே, பிரேசில் உடனான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கான ஆர்ஜென்டீனா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மெஸ்ஸியைத் தவிர்த்து 25 பேர் கொண்ட அணியை லியோனல் ஸ்கலோனிஅறிவித்தார்.

மெஸ்ஸிக்கு என்ன காயம்?

கடைசியாக நடந்த போட்டியில் மெஸ்ஸி தனது 854ஆவது கோலை அடித்து அசத்தினார். அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.

பிறகு காலில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவரது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறைவான தாக்கம் கொண்ட காயம் என்பதால் விரைவிலே குணமாகிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 முறை பேலன் தோர் விருதுபெற்ற மெஸ்ஸி இல்லாமல் ஆர்ஜென்டீனா அணி வெல்லுமா என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

திருப்பரங்குன்றத்தில் மறியலில் ஈடுபட்ட 62 பேர் மீது வழக்கு

தவெகவின் சமத்துவ கிறிஸ்துமஸ்! விஜய் கொண்டாட்டம்!

SCROLL FOR NEXT