வெற்றிக் களிப்பில் ஆர்ஜென்டீன அணி வீரர்கள்.  படம்: ஏபி
செய்திகள்

பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!

நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றது.

DIN

நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா பிரேசிலை 4-1 என வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றது.

தென் அமெரிக்க உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் ஆர்ஜென்டீனா அணி இன்று அதிகாலை 5.30 மணிக்கு பிரேசிலை சந்தித்தது.

பிரேசில் வீரர் ரபீனியா பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில் போட்டி விருவிருப்பாக தொடங்கிய 4ஆவது நிமிஷத்திலேயே ஆர்ஜென்டீன வீரர் ஜூலியன் அல்வராஸ் கோல் அடித்து அசத்தினார்.

பின்னர் தொடர்ச்சியாக ஆர்ஜென்டீன அணி வீரர்கள் 12, 37, 71ஆவது நிமிஷங்களில் முறையே பெர்னாண்டஸ், அலிஸ்டர், சிமியோனோ கோல் அடித்தார்கள்.

10 மஞ்சள் கார்டுகள்

பிரேசில் சார்பில் மேத்யூஸ் குன்ஹா 26ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் அடித்தார்.

56 சதவிகித பந்தினை ஆர்ஜெணன்டீன அணி தக்கவைத்ததுடன் 90 சதவிகித துல்லியத்துடன் பந்தினை பாஸ் செய்து அசத்தியது.

மோதிக்கொண்ட பிரேசில், ஆர்ஜென்டீன வீரர்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிகப்பெரிய போட்டி என்பதால் தள்ளு முள்ளுகளுக்கும் பஞ்சமில்லாமல் இரு அணியினருமே தலா 5 மஞ்சள் கார்டுகளை வாங்கினார்கள்.

முதல் அணியாக தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா

ஆர்ஜென்டீனா 14 போட்டிகளில் 31 புள்ளிகளைப் பெற்று தென் அமெரிக்க குழுவில் முதல் அணியாக 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றது.

பிரேசில் 21 புள்ளிகளுடன் 4ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. 10 அணிகளில் டாப் 6 அணிகள் அடுத்த உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈகுவாடர், உருகுவே அணிகள் 2,3ஆவது இடங்களில் இருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2004 - 2014 வரை அமாவாசை இருள்; 2014 - 2025 வரை பௌர்ணமி நிலவு! -மாநிலங்களவையில் அனல் பறக்க விவாதம்

பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம்

ஓ மணப்பெண்ணே... அனந்திகா சுனில்குமார்!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை ஏற்படவில்லை! - உச்சநீதிமன்றம்

கூந்தல் நெளிவில்... அஞ்சனா ரங்கன்!

SCROLL FOR NEXT