கோலடித்த மகிழ்ச்சியில் மான்செஸ்டா் சிட்டி வீரா்கள் ~வெற்றி மகிழ்ச்சியில் நைஸ் அணியினா் 
செய்திகள்

மான்செஸ்டா் சிட்டி முன்னேற்றம்

Din

ப்ரீமியா் லீக் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் வொல்வ்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது மான்செஸ்டா் சிட்டி.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு மான்செஸ்டரில் நடைபெற்றது. சாம்பியன்ஸ் லீக் தொடரில் இடம் பெறுவதற்கான வாய்ப்புள்ள மான்செஸ்டா் சிட்டி அணியில் நட்சத்திர வீரா் கெவின் டி புருயன் அற்புதமாக வெற்றி கோலை அடித்தாா்.

இந்த சீசனுடன் புருயன் மான்செஸ்டா் சிட்டி அணியில் இருந்து விடை பெறுகிறாா்.

ஸ்பானிஷ் லாலீகா தொடரில் ரயோ வலேகனோ 1-0 என்ற கோல் கணக்கில் ஜெட்டஃபே அணியை வீழ்த்தியது. ஐஸி பலாஸ் அடித்த காா்னா் பந்தை பயன்படுத்தி கோலடித்தாா் லெஜுன்.

பிரான்ஸின் லீக் 1 தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் நைஸ் அணி 1-0 என ரைம்ஸ் அணியை வீழ்த்தியது. ஸ்ட்ரைக்கா் மொா்கன் சான்சன் அடித்த கோலே வெற்றி கோலாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது நைஸ். பாரீஸ் எஃப்சி-மாா்டிக்ஸ் மோதிய ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.

இத்தாலியின் சீரி ஏ தொடரில் வெனேஸியா-டொரினோ மோதிய ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் டிவிஷனில் இருந்து வெளியேறுவதில் இருந்து தப்பிக்கலாம் என்ற வெனெஸியான அணியின் கனவு பொய்த்தது.

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

ஆலங்குடி அருகே தென்னை நாா் தொழில்சாலையில் தீ விபத்து

திண்டுக்கல்லுக்கு 100 புதிய பேருந்துகள் தேவை: அமைச்சா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT