ஆண்டனியின் சவாலை நிறைவேற்றிய நெய்மர்..! வைரல் விடியோ!
கால்பந்து வீரர் ஆண்டனியின் சவாலை ஏற்று எளிதாக செய்து முடித்த நெய்மரின் விடியோ குறித்து...
கால்பந்து வீரர் ஆண்டனியின் சவாலை ஏற்று எளிதாக செய்து முடித்த நெய்மரின் விடியோ வைரலாகி வருகிறது.
பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து வீரர்களான ஆண்டனி (25) , நெய்மர் (33) கால்பந்து உலகில் மிகவும் பிரபலமானவர்களாக இருக்கிறார்கள்.
ஆண்டனி தற்போது ரியல் பெட்டிஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
Advertisement
Advertisement
சௌதி லீக்கில் இருந்து வெளியேறிய நெய்மர் தனது சிறுவயது கிளப்பான சண்டோஷில் சமீபத்தில் இணைந்தார்.
பிரேசில் அணிக்காக 2026 உலகக் கோப்பையில் விளையாட தன்னை தகுதிபடுத்திவரும் நெய்மர் காயம் காரணமாக அவதியுற்று வருகிறார்.
இந்நிலையில், பூமா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளது. அதில் ஆண்டனி தன்னிடம் காற்றில் வரும் பந்தினை லாவகமாக காலில் தடுத்து காற்றிலேயே பாஸ் செய்வார்.
இந்த விடியோவைப் பார்த்த நெய்மர் இதெல்லாம் பெரிய விஷயமா என எளிதாக செய்து முடிப்பார். இந்த விடியோ வைரலாகி வருகிறது.
கால்பந்து உலகின் முடிசூடா இளவரசன் என ரசிகர்களால் அழைக்கப்படும் நெய்மருக்கு காயங்கள் மட்டும் இல்லையெனில் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தியிருப்பார் என அவரது ரசிகர்கள் கருதுகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.