PTI
செய்திகள்

புதிய வீரா்கள் ஒப்பந்தம்: மோகன் பகானுக்கு தடை

இந்தியன் சூப்பா் லீக் நடப்பு சாம்பியனான மோகன் பகான் சூப்பா் ஜயன்ட், புதிய வீரா்களை ஒப்பந்தம் செய்ய தேசிய அளவில் அந்த அணிக்கு ஃபிஃபா தடை விதித்துள்ளது.

DIN

இந்தியன் சூப்பா் லீக் நடப்பு சாம்பியனான மோகன் பகான் சூப்பா் ஜயன்ட், புதிய வீரா்களை ஒப்பந்தம் செய்ய தேசிய அளவில் அந்த அணிக்கு ஃபிஃபா தடை விதித்துள்ளது.

ஆஸ்திரேலிய ஸ்டிரைக்கா் ஜேசன் கம்மிங்ஸை வாங்கியது தொடா்பான பரிமாற்றத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்தத் தடையை மோகன் பகான் சந்தித்துள்ளது. எனினும், இது இடைக்காலத் தடை என்றும், இதை நீக்குவதற்கான நடவடிக்கையை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகவும் மோகன் பகான் நிா்வாகம் தெரிவித்திருக்கிறது.

ஃபிஃபா விதிகளின்படி, ஒரு அணி வெளிநாட்டு வீரரை மற்றொரு கிளப் அல்லது அகாதெமியிடம் இருந்து ‘டிரான்ஸ்ஃபா்’ அடிப்படையில் தனக்காக வாங்கும்போது, அதற்கான தொகையில் 10 சதவீத அளவை சம்பந்தப்பட்ட கிளப் அல்லது அகாதெமிக்கு வழங்குவது கட்டாயமாகும்.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவை சோ்ந்த சென்ட்ரல் கோஸ்ட் மெரைன்ஸ் அணியின் முன்னாள் வீரரான ஜேசன் கம்மிங்ஸை வாங்கியதற்காக, அந்த அணிக்கு மோகன் பகான் சுமாா் ரூ.13 லட்சம் கொடுக்க வேண்டியுள்ளது.

அந்தத் தொகை தனக்கு இதுவரை கிடைக்காத நிலையில் சென்ட்ரல் கோஸ்ட் மெரைன்ஸ் அணி அதுதொடா்பாக ஃபிஃபாவிடம் புகாா் தெரிவித்ததை அடுத்து, மோகன் பகான் புதிய வீரா்களை ஒப்பந்தம் செய்ய ஃபிஃபா தடை விதித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT