விராட் கோலி (கோப்புப் படம்) 
செய்திகள்

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் விராட் கோலி.

DIN

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார் நட்சத்திர வீரர் விராட் கோலி. 14 ஆண்டுகால டெஸ்ட் பயணம் முடிவுக்கு வருவதாக விராட் கோலி உருக்கமுடன் பதிவிட்டிருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகள் எனக்கு பல்வேறு பாடங்களைக் கற்றுத் தந்தன. எனது டெஸ்ட் போட்டிகளை நான் புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன். கடினமான முடிவாக இருந்தாலும், இதுவே மிகச் சரியான முடிவு என்று எனக்குத் தோன்றுகிறது என்று சமூக வலைதளப் பதிவு மூலம் ஓய்வை அறிவித்திருக்கும் விராட் கோலி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்த நிலையில், இன்று விராட் கோலியும் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

36 வயதான விராட் கோலி கடந்தாண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்றார். கோலியின் தலைமையில், இந்திய அணி முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்திருந்தது. டெஸ்ட் போட்டிகளில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்தது விராட் கோலிதான் என்ற பெருமையையும் அவர் வைத்துள்ளார்.

123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 30 சதங்கள், 7 இரட்டைச் சதங்களை பதிவு செய்துள்ளார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 9,230 ரன்கள் குவித்துள்ளார். விரைவில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைப்பார் என்று இவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருப்பது விராட் கோலி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

2011ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், முதன்முதலில் இந்திய அணிக்காகக் களமிறங்கினார் விராட் கோலி. அப்போதே, அவர் நட்சத்திர வீரராக ஒளிவீசுவார் என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் கண்டுகொண்டனர். இந்தாண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியே, விராட் கோலியின் கடைசிப் போட்டியாக அமைந்துவிட்டது.

2012-ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதல் சதத்தைப் பதிவு செய்திருந்த விராட் கோலி, கடைசியாக கடந்த ஆண்டு பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் சதத்தை அடித்திருந்தார்.

கடந்த ஆண்டு ரோகித் ஷர்மாவும், விராட் கோலியும் டி20 போட்டிகளிலிருந்து ஒன்றாக ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது டெஸ்ட் ஓய்வும் அப்படியே அமைந்துவிட்டது. கடந்த 5 நாள்களுக்கு முன்புதான் ரோகித் ஷர்மா, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த நிலையில், இன்று கோலியும் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | MKStalin | DMK | TNCM

SCROLL FOR NEXT