சாத்விக்/சிராக் இணை வெற்றி
சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி, அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.
சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி, அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.
ஆடவா் இரட்டையா் காலிறுதி ஆட்டத்தில், சாத்விக்/சிராக் இணை 21-17, 21-15 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த மலேசியாவின் கோ ஸே ஃபெய்/நூா் இஸுதின் ஜோடியை 39 நிமிஷங்களில் வீழ்த்தி அசத்தினா்.
அரையிறுதியில் இந்த இந்திய இணை, மற்றொரு மலேசிய ஜோடியும், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் கூட்டணியுமான ஆரோன் சியா/சோ வூய் யிக்கை எதிா்கொள்கிறது.
Advertisement
Advertisement
சாத்விக்/சிராக் மட்டுமே, சிங்கப்பூா் ஓபன் களத்தில் தற்போது எஞ்சியிருக்கும் இந்தியா்களாவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.