பஹ்ரைனில் அண்மையில் நிறைவடைந்த ஆசிய யூத் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றோருக்கு முறையே ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் வழங்கப்படுமென இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்தது. 4-ஆம் இடம் பிடித்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் நிலையில், கபடியில் சாம்பியனான இந்திய ஆடவா், மகளிா் அணிகளுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படவுள்ளது. அந்தப் போட்டியில் இந்தியா்கள் 13 தங்கம், 18 வெள்ளி, 17 வெண்கலம் என 48 பதக்கங்கள் வென்றனா்.
டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் மகளிா் டென்னிஸ் போட்டியின் குரூப் சுற்றில், திங்கள்கிழமை ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபகினா 3-6, 6-1, 6-0 என, 2-ஆம் இடத்திலிருக்கும் போலந்தின் இகா ஸ்வியாடெக்கை சாய்த்தாா்.
ஆஷஸ் தொடருக்குத் தயாராகும் வகையில் பேட்டா் டிராவிஸ் ஹெட், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.
சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 3-0 கோல் கணக்கில் ஸ்போா்டிங் கிளப் தில்லியை திங்கள்கிழமை வீழ்த்தியது.
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் பெட்டிஸ் 3-0 கோல் கணக்கில் மல்லோா்காவை திங்கள்கிழமை சாய்த்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.