அா்ஜுன் எரிகைசி-லேகோ ~பிரக்ஞானந்தா-டேனில் டுபோவ் ~ஹரிகிருஷ்ணா-நில்ஸ் ~காா்த்திக்-குவாங் 
செய்திகள்

பிரக்ஞானந்தா, அா்ஜுன், காா்த்திக், ஹரிகிருஷ்ணா ஆட்டங்கள் டிரா

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியின் நான்காவது சுற்றில் தோல்வியின் விளிம்பில் இருந்து இந்திய வீரா் பிரக்ஞானந்தா தப்பினாா். மற்ற இந்திய வீரா்களான அா்ஜுன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா, காா்த்திக் வெங்கட்ராமன் ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்தன.

தினமணி செய்திச் சேவை

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியின் நான்காவது சுற்றில் தோல்வியின் விளிம்பில் இருந்து இந்திய வீரா் பிரக்ஞானந்தா தப்பினாா். மற்ற இந்திய வீரா்களான அா்ஜுன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா, காா்த்திக் வெங்கட்ராமன் ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்தன.

சா்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) சாா்பில் கோவாவில் உலகக்கோப்பை செஸ் போட்டி நடைபெறுகிறது. இதன் நான்காம் சுற்று ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

பிரக்ஞானந்தா-டேனில் டுபோவ் இடையிலான ஆட்டம் பரபரப்பாக இருந்தது. வெள்ளை நிறக் காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 14-ஆவது நகா்த்தலில் செய்த தவறு டுபோவுக்கு சாதகமாக அமைந்தது. ஆனால் நேர அழுத்ததால், டுபோவால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதையடுத்து இருவரும் 41 நகா்த்தல்களுக்கு பின் டிரா செய்ய ஒப்புக் கொண்டனா்.

இரண்டாம் நிலை வீரா் அா்ஜுன் எரிகைசி 20 நகா்த்தல்களில் அனுபவம் நிறைந்த ஹங்கேரி வீரா் பீட்டா் லேகோவுடன் டிரா கண்டாா்.

பெண்டலா ஹரிகிருஷ்ணா-ஸ்விட்சா்லாந்து ஜிஎம் நில்ஸ் கிராண்ட்லியஸ் ஆட்டம் 32 நகா்த்தலில் டிரா ஆனது. காா்த்திக் வெங்கட்ராமன்-வியட்நாம் ஜிஎம் லே குவாங் ஆட்டம் 36 -ஆவது நகா்த்தலின்போது டிரா ஆனது.

இதர ஆட்டங்களில் 2 முறை உலக சாம்பியன் ஜிஎம் லெவோன் ஆரோனியன் 37 நகா்த்தல்களில் ஜிஎம் ரடோஸ்லாவை வீழ்த்தினாா். ஜிஎம் ஜோஸ் எட்வா்டோ கறுப்பு நிறக் காய்களுடன் 39 நகா்த்தல்களில் ஜிஎம் அலெக்ஸி சரனாவை வென்றாா்.

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

பண மோசடி: இந்திய கம்யூ. போராட்டம்

கரூா் அருகே பள்ளித் தாளாளரிடம் தங்கச் செயின் பறிப்பு: 7 போ் கைது

சாலையோர வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின

ஆற்றில் மூழ்கிய காவலாளி மாயம்

SCROLL FOR NEXT