மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள அங்கோலாவின் 50-ஆவது ஆண்டு சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள மெஸ்ஸி உள்பட ஆர்ஜென்டீன கால்பந்து அணியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போர்ச்சுகல் நாட்டிலிருந்து அங்கோலா கடந்த 1975ஆம் ஆண்டு நவ.11ஆம் நாள் சுதந்திரம் பெற்றது.
அங்கோலாவின் இந்த 50-ஆவது ஆண்டு சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு இந்திய சமூகத்தினரைச் சந்தித்துப் பேசியதும் கவனிக்கத்தக்கது.
இந்தக் கொண்டாட்டத்திற்கான நிகழ்வுகள் இன்றுமுதல் தொடங்குகின்றன.
உலகக் கோப்பை வென்ற ஆர்ஜென்டீன அணியினர் உடன் அங்கோலா மோதும் போட்டிக்காக 13 மில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த நாட்டின் சுதந்திர நாளைக் குறிப்பிடும் வகையில் அங்கோலாவின் 11 நவம்பர் திடலில் இந்தப் போட்டி நடைபெற இருக்கிறது.
ஆர்ஜென்டீன கால்பந்து அணி வியாழக்கிழமை அங்கோலாவிற்குச் சென்றடையும் என அதன் கால்பந்து அமைப்பு தெரிவித்துள்ளது.
அங்கோலாவின் தலைநகர் லுவாண்டாவில் இந்தக் கொண்டாட்ட நிகழ்வுகள் தொடங்குகின்றன.
அங்கோலா நாட்டின் அதிபர் ஜான் மானுவல் கோன்கால்வ்ஸ் லாரன்கோவின் முன்னிலையில், ராணுவ வீரர்கள் அவர்களது தேசியக்கொடியை அசைத்து தொடங்கினர்.
போர்ச்சுகலில் இருந்து அங்கோலா 1975ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றனர். இருப்பினும் உள்நாட்டுப் போரினால் 5 லட்சம் முதல் 10 லட்சம் மக்கள் உயிரிழந்தனர்.
இந்த உள்நாட்டுப் போர் கடந்த 2002-இல் முடிவுக்கு வந்தது. சுதந்திரத்திற்கு பிறகு, எண்ணெய் வளம் நிரம்பிய இந்த நாட்டை ஒரேயொரு கட்சியான அங்கோலா மக்களின் விடுதலை இயக்கம் ஆட்சி செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.