நாட்டின் 77ஆவது குடியரசுத் தினவிழாவையொட்டி சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ANI
குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆா்.என்.ரவி 5ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நிகழ்வில் பங்கேற்க வருகை தந்த ஆளுநரை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள், நீதிபதிகள், அரசு செயலா்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றுள்ளனர்.ஆளுநரை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்றதை தொடர்ந்து, இந்திய முப்படை வீரர்கள், கடலோரக் காவல்படை மற்றும் தமிழகக் காவல்துறையினரின் கம்பீரமான அணிவகுப்பு நடைபெற்றது.ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தபோது, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மூவர்ணக் கொடிக்கு மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது.பல்வேறு அரசுத் துறைகளின் சாதனைகளை விளக்கும் வாகன அணிவகுப்பும் நடைபெற்றது.