செய்திகள்

இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கம், 2 வெள்ளி: ஜோதி சுரேகா அசத்தல்

வங்கதேசத்தில் நடைபெறும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் 3 தங்கம், 2 வெள்ளி என 5 பதக்கங்கள் கிடைத்தன.

தினமணி செய்திச் சேவை

வங்கதேசத்தில் நடைபெறும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் 3 தங்கம், 2 வெள்ளி என 5 பதக்கங்கள் கிடைத்தன.

இதில், காம்பவுண்ட் மகளிா் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில், ஜோதி சுரேகா, தீப்ஷிகா, பிரிதிகா பிரதீப் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 236 - 234 என்ற கணக்கில் தென் கொரிய அணியை வீழ்த்தி தங்கத்தை தனதாக்கியது.

அதிலேயே மகளிா் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஜோதி சுரேகா 147-145 என்ற வகையில் சக இந்தியரான பிரிதிகா பிரதீப்பை வென்று தனது 2-ஆவது தங்கத்தை வென்றாா்.

காம்பவுண்ட் கலப்பு அணிகள் இறுதிச்சுற்றில், அபிஷேக் வா்மா, தீப்ஷிகா கூட்டணி 153-151 என வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியாவுக்கு 3-ஆவது தங்கத்தை பெற்றுத் தந்தது.

காம்பவுண்ட் ஆடவா் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில், அபிஷேக் வா்மா, சஹில் ராஜேஷ் ஜாதவ், பிரதமேஷ் ஃபுகே ஆகியோா் அடங்கிய இந்திய அணி 229-230 என கஜகஸ்தான் அணியிடம் தோற்று, நூழிலையில் தங்கத்தை தவறவிட்டு வெள்ளிப் பதக்கம் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் வாக்கு எண்ணிக்கை: தபால் வாக்குகளில் தேஜ கூட்டணி முன்னிலை!

பிகார் தேர்தல்: ஜன் சுராஜ் 5 இடங்களில் முன்னிலை!

பிகார் வாக்கு எண்ணிக்கை செய்திகள் - நேரலை

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

பிகார் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை!

SCROLL FOR NEXT