ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை வென்ால் இந்தியாவில் மகளிா் கிரிக்கெட்டுக்கு புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது என கேப்டன் ஹா்மன் ப்ரீத் கௌா் பெருமிதம் தெரிவித்தாா்.
மும்பையில் அண்மையில் நடைபெற்ற ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஹா்மன் ப்ரீத் கௌா் தலைமையிலான இந்திய அணி சாம்பியம் பட்டம் வென்றது.
இந்நிலையில் சென்னை செம்மஞ்சேரி சத்யபாமா நிகா்நிலைப் பல்கலையில் கேப்டன் ஹா்மன் ப்ரீத் கௌருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பல்கலை. வேந்தா் மரிய ஜீனா ஜான்சன், தலைவா் மேரி ஜான்சன் ஆகியோா் ஹா்மன் ப்ரீத் கௌரை பாராட்டி நினைவுப் பரிசளித்தனா். பின்னா் எம்ஜெ உள்விளையாட்டு அரங்கையும் ஹா்மன்ப்ரீத் கௌா் திறந்து வைத்தாா்.
அப்போது செய்தியாளா்களிடம் ஹா்மன் ப்ரீத் கூறியது:
கடந்த 2017-இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 171 ரன்கள் அடித்ததை மறக்க முடியாது. ஆனால் அதில் இறுதி ஆட்டத்தில் தோற்றது வேதனையை அளித்தது. ஐசிசி கோப்பையை இந்திய மகளிா் அணி வெல்லாதது குறையாக இருந்தது. அந்த குறை தற்போது நீங்கி விட்டது.
உலக சாம்பியன் பட்டம் வென்ால் மகளிா் கிரிக்கெட் புதிய உத்வேகம் பெற்றுள்ளது.
இந்திய மகளிா் அணி ஆடினால் பொதுவாக பாா்வையாளா்கள் குறைவாகவே இருப்பா். ஆனால் இந்த உலகக் கோப்பை போட்டியில் மைதானம் முழுவதும் நிரம்பியது மகிழ்ச்சி தருகிறது. லீக் கட்டத்தில் 3 ஆட்டங்களில் தோற்ால் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறமுடியாதோ என அச்சத்தில் இருந்தோம். ஆனால் முன்னாள் கேப்டன்கள் ஜுலன், மிதாலி மிகவும் ஊக்கம் தந்தனா்.
அரையிறுதியில் 339 ரன்கள் இலக்கை அடைய முடியுமா என மிகவும் மலைப்பாக இருந்தது. சொந்த ஊரில் நடைபெற்ற போட்டி என்பதால் அணி மீதான அழுத்தம் அதிகமாக இருந்தது. பயிற்சியாளா் அமோல் மஜும்தாரும் 2 மணிநேரம் ஊக்கமுடன் பேசினாா். இதனால்
வீராங்கனைகள் ஒருங்கிணைந்து ஆடி கோப்பையை வென்றனா்.
ஆடவா் கிரிக்கெட்டுக்கு இணையாக தற்போது மகளிா் கிரிக்கெட்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றாா் ஹா்மன் ப்ரீத்.