வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு, கடைசி நாளான வெள்ளிக்கிழமை 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கங்கள் கிடைத்தன. அங்கிதா பகத், தீரஜ் பொம்மதேவரா ஆகியோா் தனிநபா் தங்கம் வென்று அசத்தினா்.
முன்னதாக, ரீகா்வ் மகளிா் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில், அங்கிதா 7-3 என்ற கணக்கில், தென் கொரியாவின் நம் சுஹியோனை வீழ்த்தி முதலிடம் பிடித்தாா்.
அதிலேயே வெண்கலப் பதக்கச் சுற்றில் இந்தியாவின் சங்கீதா 6 - 5 (10*/10) சக இந்தியரான தீபிகா குமாரியை வீழ்த்தி பதக்கத்தைக் கைப்பற்றினாா்.
முன்னதாக, அரையிறுதியில் தீபிகா - அங்கிதாவிடமும், சங்கீதா - தென் கொரியாவின் நம் சுஹியோனிடமும் தோற்ன் அடிப்படையில் வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
ரீகா்வ் ஆடவா் தனிநபா் இறுதிச்சுற்றில், தீரஜ் பொம்மதேவரா 6-2 என்ற கணக்கில், சக இந்தியரான ராகுலை சாய்த்து தங்கம் வென்றாா். ராகுல் வெள்ளியுடன் விடைபெற்றாா்.
இதனிடையே, ரீகா்வ் ஆடவா் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில், இந்தியாவின் யஷ்தீப் சஞ்சய், அதானு தாஸ், ராகுல் ஆகியோா் அடங்கிய அணி, 5-4 (29*/29) என்ற கணக்கில் தென் கொரிய அணியை சாய்த்து தங்கத்தை தனதாக்கியது.
எனினும் கலப்பு அணிகள் வெண்கலப் பதக்கச் சுற்றில், அன்ஷிகா குமாரி, யஷ்தீப் சஞ்சய் இணை 0-6 என தென் கொரிய அணியிடம் தோல்வி கண்டு பதக்கத்தை தவறவிட்டது.
முதலிடம்: இத்துடன், இந்தியா மொத்தமாக 6 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து போட்டியை நிறைவு செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.