கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் தேர்வான மிகச்சிறிய நாடாக குராசோ தீவு புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.
ஜமைக்காவுடனான போட்டி சமனில் முடிந்த பிறகு தனது முதல் உலகக் கோப்பையில் குராசோ தேர்வாகியுள்ளது.
வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கண்டத்தில் இருக்கும் குரூப் சி பிரிவில் ஜமைக்கா, குராசோ அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் இரு அணிகளுமே கோல் அடிக்காமல் ஆட்டம் சமனில் முடிந்தது. இதன் மூலம் இந்தப் பிரிவில் 13 புள்ளிகளுடன் குராசோ உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளது.
இந்தக் கண்டத்தில் இருந்து பனாமா, ஹைதி ஆகிய அணிகளும் உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளன.
குராசோ தீவில் கடந்த ஜனவரியின்படி 15 லட்சத்து 6,115 பேர் மட்டுமே வசிப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பாக 2018 உலகக் கோப்பையில் ஐஸ்லாந்து (35 லட்சம் பேர் கொண்டது) மிகச்சிறிய நாடாக சாதனையை நிகழ்த்தியிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.