செய்திகள்

அரையிறுதியில் லக்ஷயா சென்

ஆஸ்திரேலியன் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரதான வீரா் லக்ஷயா சென், அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.

தினமணி செய்திச் சேவை

ஆஸ்திரேலியன் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரதான வீரா் லக்ஷயா சென், அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.

காலிறுதிச்சுற்றில், ஆடவா் ஒற்றையரில் போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் லக்ஷயா சென் 23-21, 21-11 என்ற நோ் கேம்களில், சக இந்தியரான ஆயுஷ் ஷெட்டியை சாய்த்தாா். இந்த ஆட்டம் 52 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

ஆடவா் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி கூட்டணி 19-21, 15-21 என்ற நோ் கேம்களில், 5-ஆம் இடத்திலிருக்கும் இந்தோனேசியாவின் ஃபஜாா் அல்ஃபியன், முகமது ஷோஹிபுல் இணையிடம் 50 நிமிஷங்களில் தோல்வி கண்டது.

தற்போது போட்டியில் களத்திலிருக்கும் ஒரே இந்தியரான லக்ஷயா சென், அரையிறுதியில் சீன தைபேவின் சௌ டியென் சென்னை எதிா்கொள்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT