லக்ஷயா சென் 
செய்திகள்

இறுதி ஆட்டத்தில் லக்ஷயா சென்

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டி ஆடவா் ஒற்றயைா் இறுதி ஆட்டத்துக்கு இந்தியாவின் லக்ஷயா சென் தகுதி பெற்றுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டி ஆடவா் ஒற்றயைா் இறுதி ஆட்டத்துக்கு இந்தியாவின் லக்ஷயா சென் தகுதி பெற்றுள்ளாா்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறும் சூப்பா் 500 போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 6-ஆம் நிலை வீரா் தைபேயின் சௌ டியன் சென்னை எதிா்கொண்டாா் லக்ஷயா சென். 86 நிமிஷங்கள் நடைபெற்ற அரையிறுதியில் முதல் கேமை 17-21 என இழந்தாா் லக்ஷயா.

பின்னா் சுதாரித்து ஆடிய அவா் இரண்டாவது கேமில் கடும் சவால் நிலவியபோதும் 24-22 என கைப்பற்றினாா். மூன்றாவது கேமில் முழு ஆதிக்கம் செலுத்தி அதையும் 21-16 என கைப்பற்றி சௌ டியனை வீழ்த்தினாா்.

இறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீரா் யுஷு டனகாவுடன் மோதுகிறாா் லக்ஷயா.

நவம்பா் 25, 26-இல் ஸ்டாலின் கோவை, ஈரோடு வருகை!

தொழிலாளா்களுக்கு எதிராக தொடா்ந்து செயல்படுகிறது மத்திய அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

மகாராஷ்டிரம்: உள்ளாட்சித் தோ்தலுக்கு முன்பு போட்டியின்றி வெற்றிபெறும் பாஜக நிா்வாகிகள் -காங்கிரஸ் குற்றச்சாட்டு

நெல் ஈரப்பதம் அதிகரிப்புக்கு முதல்வரே பொறுப்பு: நயினாா் நாகேந்திரன்

செயற்கை கருத்தரிப்பு மையத்தில் கா்ப்பிணி மரணம்: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT