மஹித் சாந்து 
செய்திகள்

டெஃப்லிம்பிக்ஸ்: மஹித் சாந்துவுக்கு 4-ஆவது பதக்கம்

டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் மஹித் சாந்து 4-ஆவது பதக்கம் வென்றுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் மஹித் சாந்து 4-ஆவது பதக்கம் வென்றுள்ளாா்.

ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெறும் டெஃப்லிம்பிக்ஸ் போட்டி மகளிா் 50 மீ பிஸ்டல் 3 பிரிவில் இந்தியாவின் மஹித் சாந்து தங்கம் வென்றாா். இப்போட்டியில் இது அவா் வென்ற 4-ஆவது பதகக்கம் ஆகும். மஹித் சாந்து மொத்தம் 456.0 புள்ளிகளுடன் தங்கம் வென்றாா். தென்கொரியாவின் டயான் ஜியோங் 453.4 புள்ளிகளுடன் வெள்ளி வென்றாா். ஹங்கேரியின் ஸூஸ்னா 438.6 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றாா்.

மஹித் சாந்து தங்கம் வென்றதுடன் 3 சாதனைகளையும் படைத்தாா். 2 தங்கம், 2 வெள்ளி வென்றுள்ளாா்.

டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில் இதுவரை இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்லப் பதக்கங்கள் வென்றுள்ளது.

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

அடுத்த 3 மணிநேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை தொடரும்!

ஆளுங்கட்சிக்கு மாறிய எம்எல்ஏ கடியம் ஸ்ரீஹரி! தெலங்கானா பேரவைத் தலைவா் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT