செய்திகள்

சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன்: காலிறுதிச்சுற்றில் தன்வி, மன்ராஜ்!

இந்தியாவின் தன்வி சர்மா, மன்ராஜ் சிங் ஆகியோர் அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

தினமணி செய்திச் சேவை

சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் தன்வி சர்மா, மன்ராஜ் சிங் ஆகியோர் அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

ரவுண்ட் ஆஃப் 16- இல் மகளிர் ஒற்றையரில், தன்வி சர்மா 13- 21, 21- 16, 21- 19 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 2- ஆம் இடத்திலிருந்த ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை வீழ்த்தி அசத்தினார். முதலிடத்தில் இருக்கும் உன்னதி ஹூடா 21- 15, 21- 10 என்ற கணக்கில் சக இந்தியரான தஸ்மின் மிர்ரை வெளியேற்றினார்.

இஷாராணி பருவா 21- 15, 21- 8 என்ற கேம்களில், 6- ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் பாலினா புரோவாவை வீழ்த்தி அசத்தினார். 8- ஆம் இடத்திலிருந்த அனுபமா உபாத்யாய 13- 21, 21- 12, 13- 21 என்ற வகையில், ஹாங்காங்கின் சின் யான் ஹேப்பியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார். 7- ஆம் இடத்திலிருக்கும் ரக்ஷிதா ஸ்ரீ 16- 21, 21- 19, 21- 17 என்ற கேம்களில், தேவிகா சிஹக்கை வீழ்த்தினார்.

ஆடவர் ஒற்றையரில், மன்ராஜ் சிங் 21- 15, 21- 18 என, 3- ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் பிரதான வீரர் ஹெச்.எஸ்.பிரணய்யை வீழ்த்தி அசத்தினார். 5- ஆம் இடத்திலிருக்கும் கே.ஸ்ரீகாந்த் 21- 6, 21- 16 என்ற வகையில் இந்தியாவின் சனீத் தயானந்தை வென்றார். இதர ஆட்டங்களில், பிரியன்ஷு ரஜாவத்தும் காலிறுதிக்கு முன்னேற, 4- ஆம் இடத்திலிருந்த கிரண் ஜார்ஜ் தோல்வியுற்றார்.

ஆடவர் இரட்டையரில், 2- ஆம் இடத்திலிருந்த பிருத்வி கிருஷ்ணமூர்த்தி/சாய் பிரதீக் இணை 18- 21, 21- 19, 12- 21 என்ற கேம்களில், மலேசியாவின் முகமது ஃபைக்/ஹாங் கான் லோக் கூட்டணியிடம் தோல்வி கண்டது.

மகளிர் இரட்டையரில், முதலிடத்தில் இருக்கும் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை 21- 17, 21- 12 என்ற கணக்கில் சக இந்திய ஜோடியான ஜெனித் அபிகேல்/லிகிதா ஸ்ரீவாஸ்தவாவை சாய்த்தது. பிரியா கொஞ்செங்பம்/ஸ்ருதி மிஸ்ரா கூட்டணி 21- 17, 24- 22 என்ற கேம்களில், 4- ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் பாலினா புரோவா/யெவ்ஹெலினா கான்டெமைர் இணையை வெளியேற்றியது.

கலப்பு இரட்டையரில், நிதின்/ஸ்ரீநிதி ஜோடி 21- 17, 21- 19 என்ற வகையில், சக இந்திய ஜோடியான சதிஷ்குமார்/ஆத்யா வரியத்தை சாய்த்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை - ஜெய்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்!

இணைய வா்த்தகம் மூலம் ஓய்வுப் பெற்ற பேராசிரியரிடம் ரூ.45 லட்சம் மோசடி!

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு டிசம்பா் 2, 3-இல் பேச்சுப் போட்டி

விவசாயமும், மின்சாரமும்...

உதவிப் பேராசிரியா் பணி நியமனம்: அனுபவச் சான்று பெறுவதற்காக குவிந்த ஆசிரியா்கள்!

SCROLL FOR NEXT