செய்திகள்

ஜாவோகிர் சிண்டாரோவ் சாதனை சாம்பியன்

கோவாவில் நடைபெற்ற 11-ஆவது ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில், உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிண்டாரோவ் (19) புதன்கிழமை சாம்பியன் கோப்பை வென்றார்.

தினமணி செய்திச் சேவை

பனாஜி: கோவாவில் நடைபெற்ற 11-ஆவது ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில், உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிண்டாரோவ் (19) புதன்கிழமை சாம்பியன் கோப்பை வென்றார்.

இறுதிச்சுற்றில், 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் வெய் யியை வீழ்த்திய அவர், போட்டியின் வரலாற்றிலேயே இளம் சாம்பியனாகி சாதனை படைத்திருக்கிறார்.

முன்னதாக இந்தப் போட்டியில் 206 பேர் பங்கேற்ற நிலையில், நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ், மகளிர் உலகக் கோப்பை நடப்பு சாம்பியனான திவ்யா தேஷ்முக் உள்பட 24 இந்தியர்களும் அதில் அங்கம் வகித்தனர்.

சிங்கிள் எலிமினேஷன் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், அர்ஜுன் எரிகைசி காலிறுதியில் தோற்றதுடன் இந்தியர்களின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அடுத்தடுத்த கட்டங்களில் வென்று முன்னேறிய உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிண்டாரோவ், சீனாவின் வெய் யி இறுதிச்சுற்றில் மோதினர்.

இவர்கள் சந்தித்த இறுதிச்சுற்றின் இரு கேம்களும் டிரா ஆக, இருவருமே 1-1 என சமநிலை கண்டனர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக 'டை பிரேக்கர்' சுற்று புதன்கிழமை நடைபெற்றது.

இதில் முதல் கேமை இருவரும் டிரா செய்ய, 1.5-1.5 என மீண்டும் சமநிலை கண்டனர். எனினும் கருப்பு நிற காய்களுடன் விளையாடி சிண்டாரோவ் அடுத்த கேமில் வெற்றி (1-0) பெற்றார். இதனால் அவர் இறுதிச்சுற்றில் 2.5-.15 என்ற கணக்கில் வென்று சாம்பியன் ஆனார். அவருக்கு ரூ.1.07 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வி.பி.சிங் போன்ற பிரதமரை 'மிஸ்' செய்கிறோம்! முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

நவ. 29, 30 மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும்! வடதமிழகம் நோக்கி நகரும்!

ஹாங்காங் தீ விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு! 279 பேர் மாயம்!

SCROLL FOR NEXT