தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் நடைபெறும் கோபா பொலிவியா கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில் இரு அணிகளுக்கும் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலினால் இரு அணியிலும் சேர்த்து மொத்தம் 17 பேருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொலிவியன் கோப்பைக்கான காலிறுதியில் ரியல் ஒரூரோ அணியும் ப்ளூமிங் அணியும் மோதின.
முதல் லெக்கில் ப்ளூமிங் 2-1 என முன்னிலை வகிக்க, இரண்டாம் லெக்கில் ஆட்டம் 2-2 என சமனில் முடிந்தது.
ஒட்டுமொத்த கோல்கள் அடிப்படையில் ப்ளூமிங் அணி 4-3 என வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தப் போட்டியில் முழு நேரம் முடிந்தபிறகு இரு அணியின் வீரர்களும் கடுமையாக மோதிக்கொண்டனர். வீரர்கள் மட்டுமில்லாமல் அணியின் பயிற்சியாளர்களும் இந்த மோதலில் ஈடுபட்டார்கள்.
பாதுகாப்பு அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை தடுத்து நிறுத்தினர். வீரர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
11 வீரர்கள் உள்பட மொத்தம் 17 பேருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. ப்ளூமிங் அணியிலிருந்து 7 வீரர்களும் ஒரூரோ அணியில் 4 வீரர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
ப்ளூமிங் அணியின் அரையிறுதிப் போட்டியில் குறைந்தபட்சம் 6 வீரர்களாவது தடைசெய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டி கால்பந்து ரசிகர்கள் மத்தியில் இந்தாண்டில் நடைபெற்ற மிகப்பெரிய வன்முறையாக பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.