17 வயதுக்குள்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பையை போர்ச்சுகல் அணி முதல்முறையாக வென்று வரலாறு படைத்துள்ளது.
இதேமாதிரி சீனியர் உலகக் கோப்பையை கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கத்தாரில் நடைபெற்ற யு-17 இறுதிப் போட்டியில் போர்ச்சுகல் அணியும் ஆஸ்திரியாவும் மோதின.
இந்தப் போட்டியில் போர்ச்சுகல் அணி 1-0 என வெற்றி பெற்றது. போட்டியின் 32-ஆவது நிமிஷத்தில் அன்சியோ கப்ராய் கோல் அடித்தார்.
பின்னர் ஆஸ்திரியா எவ்வளவோ முயன்றும் போர்ச்சுகல் அணியின் டிஃபென்ஸை தாண்டி கோல் அடிக்க முடியவில்லை.
இந்த உலகக் கோப்பையில் முதல்முறையாக 48 நாடுகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பாக, போர்ச்சுகல் 1989-இல் மூன்றாவது பிளே-ஆஃப்ஸ் வரைக்கும் முன்னேறி இருந்தது.
தற்போது, உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. அடுத்தாண்டு ஃபிஃபா நடத்தும் சீனியர் உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற இருக்கின்றன.
போர்ச்சுகல் அணி மிகுந்த பலம்வாய்ந்ததாக இருக்கிறது. இந்தமுறை ரொனால்டோ தலைமையில் முதல்முறையாக உலகக் கோப்பையை வெல்லுமா என அவரின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.