முகப்பு
செய்திகள்

மெஸ்ஸி தலைமையில் புதிய வரலாறு... சாம்பியனான இன்டர் மியாமி!

மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமியின் வரலாற்றுச் சாதனை குறித்து...

Updated On : 30 நவம்பர், 2025 at 4:40 AM
ஈஸ்டர்ன் கான்ஃபெரன்ஸ் கோப்பை உடன் இன்டர் மியாமி வீரர்கள்.
பகிர்:

மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமி அணி முதல்முறையாக ஈஸ்டர்ன் கான்ஃபெரன்ஸ் கோப்பையை வென்றுள்ளது.

கடந்த சீசனில் பிளே-ஆப்ஸ் சுற்றுவரை வந்த இன்டர் மியாமி அணி அரையிறுதுக்கு முன்னேறாமல் தோல்வியுற்றது.

எம்எல்எஸ் தொடரில் ஈஸ்டர்ன் கான்ஃபெரன்ஸ் குரூப்பில் இறுதிப் போட்டியில் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணியும் ஷான் ஜான்சன் தலைமையிலான நியூயார்க் சிட்டி அணியும் மோதின.

இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணி 5-1 என அபார வெற்றி பெற்றது. இளம் ஆர்ஜென்டீன வீரர் டாடியோ அலெண்டே ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இன்டர் மியாமி அணி முதல்முறையாக ஈஸ்டர்ன் கான்ஃபெரன்ஸ் கோப்பையை வென்றுள்ளது.

அடுத்ததாக, எம்எல்எஸ் கோப்பைக்கான இறுதிப் போட்டி டிச.6ஆம் தேதி நடைபெறுகிறது.

summary

Inter Miami Wins Eastern Conference Title with 5-1 Rout Over NYCFC

முழு கட்டுரையைப் படிக்க →