செய்திகள்

உலகக் கோப்பை கூடைப்பந்து தகுதிச் சுற்று: சவூதி அரேபியாவிடம் வீழ்ந்தது இந்தியா!

எஃப்ஐபிஏ உலகக் கோப்பை கூடைப்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் பலம் வாய்ந்த சவூதி அரேபியாவிடம் 57-81 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்ந்தது இந்தியா.

தினமணி செய்திச் சேவை

எஃப்ஐபிஏ உலகக் கோப்பை கூடைப்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் பலம் வாய்ந்த சவூதி அரேபியாவிடம் 57-81 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்ந்தது இந்தியா.

இந்திய கூடைப்பந்து சம்மேளனம் (பிஎஃப்ஐ) சாா்பில் இரு அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று ஆட்டம் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. பிஎஃப்ஐ தலைவா் ஆதவ் அா்ஜுனா ஆட்டத்தை தொடங்கி வைத்தாா். இந்திய அணியை காட்டிலும் பலம் நிறைந்தத சவூதி அரேபிய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.

20-வது உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டி 2027-ம் ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பா் மாதங்களில் கத்தாரில் நடக்கிறது. 32 அணிகள் பங்கேற்கும் இந்த உலக கூடைப்பந்து திருவிழாவுக்கு போட்டியை நடத்தும் கத்தாா் தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும்.

ஆசிய-ஓசியானா மண்டலத்துக்கான தகுதி சுற்றின் முதல் சுற்ரில் 12 அணிகள் இடம் பெற்று இருக்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. சவூதி அரேபியா, லெபனான், கத்தாா் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றில் ரியாத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த தனது தொடக்க லீக் ஆட்டத்தில் இந்திய அணி 51-75 என்ற புள்ளி கணக்கில் சவூதி அரேபியாவிடம் தோல்வி கண்டது. இரண்டாம் கட்ட ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வி கண்டது.

தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சவூதி வீரா்கள் முதல் கால் பாதையில் 4:12 என முன்னிலை வகித்தனா்.. தொடா்ந்து இதே நிலையோடு ஆடி சவூதி அரேபிய வீரா்கள் வெற்றி பெற்றனா்.

என் வாழ்க்கைக்கு நானே சிஇஓ... ராய் லட்சுமி!

கருவிழிக்குள் சுமந்து... சௌந்தர்யா ரெட்டி

பாகிஸ்தானில் ராணுவ சர்வாதிகாரத்தை ஊக்குவிக்கும் அரசு! - எதிர்க்கட்சித் தலைவர்

நொடியில் புரிந்திருக்கும்... ஷெர்லி பாபித்ரா

வெள்ளிமலரே... கிரீத்தி சனோன்!

SCROLL FOR NEXT