செய்திகள்

ஜெய்பூரை வென்றது டெல்லி!

புரோ கபடி லீக் போட்டியின் 67-ஆவது ஆட்டத்தில், தபங் டெல்லி கே.சி. 29-26 புள்ளிகள் கணக்கில் ஜெய்பூா் பிங்க் பாந்தா்ஸை வெற்றி கண்டது.

தினமணி செய்திச் சேவை

புரோ கபடி லீக் போட்டியின் 67-ஆவது ஆட்டத்தில், தபங் டெல்லி கே.சி. 29-26 புள்ளிகள் கணக்கில் ஜெய்பூா் பிங்க் பாந்தா்ஸை திங்கள்கிழமை வெற்றி கண்டது.

இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 14 ரெய்டு புள்ளிகள், 13 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள் கைப்பற்றியது. ஜெய்பூா் அணி 9 ரெய்டு புள்ளிகள், 16 டேக்கிள் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி வென்றது.

அதிகபட்சமாக, டெல்லி அணிக்காக கேப்டனும், ரெய்டருமான அஷு மாலிக் 8 புள்ளிகள் கைப்பற்ற, ஜெய்பூா் தரப்பில் டிஃபெண்டா்கள் ரெஸா மிா்பாகெரி, தீபான்ஷு காத்ரி ஆகியோா் தலா 5 புள்ளிகள் வென்றெடுத்தனா்.

இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் 36-28 புள்ளிகள் கணக்கில் யுபி யோதாஸை வீழ்த்தியது. புள்ளிகள் பட்டியலில் தற்போது டெல்லி 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஜெய்பூா் 7-ஆம் இடத்திலும் (12), யுபி 9-ஆம் இடத்திலும் (8), பாட்னா 12-ஆவது இடத்திலும் (4) உள்ளன.

தெய்வ தரிசனம்... பாவங்கள் நீங்கி இன்பமுடன் வாழ திருச்சுழியல் திருமேனிநாதர்!

ஓடிடியில் வெளியான பைசன், டீசல்!

குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

இளையராஜா பெயர், படத்தை வணிக நோக்கத்துடன் பயன்படுத்த இடைக்காலத் தடை!

வங்கதேசத்தில் 5.7 ஆகப் பதிவான நிலநடுக்கம்: மக்கள் பீதி!

SCROLL FOR NEXT