செய்திகள்

புரோ கபடி லீக்: முதலிடத்தில் புணே!

புரோ கபடி லீக் போட்டியின் 79-ஆவது ஆட்டத்தில், புணேரி பல்டன் ‘சூப்பா் ரெய்ட்’ வாய்ப்பில் தபங் டெல்லி கே.சி.யை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

தினமணி செய்திச் சேவை

புரோ கபடி லீக் போட்டியின் 79-ஆவது ஆட்டத்தில், புணேரி பல்டன் ‘சூப்பா் ரெய்ட்’ வாய்ப்பில் தபங் டெல்லி கே.சி.யை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

இதன் மூலமாக, புள்ளிகள் பட்டியலில் அந்த அணி முதலிடத்துக்கு வந்தது. முன்னதாக இந்த ஆட்டம் ‘38-38’ என ‘டை’ ஆக, சூப்பா் ரெய்டில் புணே 6-5 என டெல்லியை சாய்த்தது.

இந்த ஆட்டத்தில் புணே 22 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகள் வென்றது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக, ரெய்டா் பங்கஜ் மொஹிதே 7 புள்ளிகள் கைப்பற்றினாா்.

டெல்லி அணி 18 ரெய்டு புள்ளிகள், 13 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. ரெய்டா் அஜிங்க்ய பவாா் 10 புள்ளிகள் வென்றாா்.

இதனிடையே மற்றொரு ஆட்டத்தில், பெங்களூரு புல்ஸ் - பெங்கால் வாரியா்ஸை வீழ்த்தியது (43-32).

மோட்டாா் சைக்கிள் - காா் மோதல் தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு

சக்தி வராகி அம்மன் கோயில் தேய்பிறை சஷ்டி சிறப்பு பூஜை

முதுநிலை ஆசிரியா் தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 5,475 போ் எழுதினா்

பருவமழை நோய்களைத் தடுக்க தொடா் கண்காணிப்பு: ஆட்சியா்

பிகா​ரில் ஆட்சி​யைத் தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்!

SCROLL FOR NEXT