செய்திகள்

சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி: இந்தியா - பாகிஸ்தான் "டிரா'

ஜூனியர்களுக்கான சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 3-3 கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை டிரா செய்தது.

தினமணி செய்திச் சேவை

ஜூனியர்களுக்கான சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 3-3 கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை டிரா செய்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் கோல் கணக்கை ஹன்னான் ஷாஹித் 5-ஆவது நிமிஷத்தில் தொடங்க, முதல் பாதியை அந்த அணி முன்னிலையுடன் நிறைவு செய்தது.

2-ஆவது பாதியில் அதன் கோல் எண்ணிக்கையை சூஃபியான் கான் 39-ஆவது நிமிஷத்தில் 2-ஆக அதிகரித்தார். இந்நிலையில் மீண்ட இந்தியா, 43-ஆவது நிமிஷத்தில் அராய்ஜீத் சிங் ஹண்டால் மூலமாக தனது கோல் கணக்கை தொடங்கியது.

தொடர்ந்து செüரப் ஆனந்த் குஷ்வாஹா 47-ஆவது நிமிஷத்தில் ஸ்கோர் செய்ய, இந்தியா 2-2 என சமன் செய்தது.

அதே உத்வேகத்தில் மன்மீத் சிங் 55-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலால், இந்தியா 3-2 என முன்னிலை பெற்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் முனைப்பு காட்ட, சூஃபியான் கான் 55-ஆவது நிமிஷத்தில் மீண்டும் அடித்த கோலால் அந்த அணி 3-3 என சமன் செய்தது.

எஞ்சிய நேரத்தில் இரு அணிகளுக்கும் மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, ஆட்டம் 3-3 என டிராவில் முடிந்தது.

இந்தியா அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை, புதன்கிழமை (அக். 15) எதிர்கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூமியில் நாளொன்றுக்கு 5 செயற்கைக் கோள்கள் விழும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

மேகம், மலை, நீர், நிலம்... ஷாமா சிக்கந்தர்!

மக்களுக்குப் பிடித்த சின்ன திரை நடிகை! விருது வென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி!

அஞ்சான் மறுவெளியீட்டுத் தேதி!

ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT