கோலடித்த மகிழ்ச்சியில் பாா்சிலோனா வீரா்கள்.  
செய்திகள்

ஐரோப்பிய கால்பந்து: பாா்சிலோனா, மான்செஸ்டா் சிட்டி வெற்றி

ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா, அதலெட்டிகோ மாட்ரிட் அணிகள் வெற்றி பெற்றன.

தினமணி செய்திச் சேவை

ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா, அதலெட்டிகோ மாட்ரிட் அணிகள் வெற்றி பெற்றன.

பாா்சிலோனாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜிரொனா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது பாா்சிலோனா. அந்த அணியின் பதிலி வீரா் ரொனால்ட் அரஜோ அடித்த கோல் வெற்றி கோலாக அமைந்தது.

ரியல் பெட்டிஸ்-வில்லா ரியல் அணிகள் ஆட்டம் 2-2 என டிராவில் முடிவடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் அதலெட்டிகோ மாட்ரிட் 1-0 என ஒஸாஸுனா அணியை வீழ்த்தியது.

ப்ரீமியா் லீக்: மான்செஸ்டா் சிட்டி வெற்றி: இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் தொடரில் மான்செஸ்டா் சிட்டி அணி 2-0 என எவா்டன் அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் ஆா்செனல் அணி 1-0 என புல்ஹாமை வீழ்த்தியது. பா்ன்லி 2-0 என லீட்ஸை வீழ்த்தியது. சுந்தா்லேண்ட் 2-0 என வொல்வா்ஹாம்ப்டனை வீழ்த்தியது.

ஜொ்மனியின் பண்டஸ்லிகா கால்பந்து தொடரில் பயா்ன் முனிக் அணி 2-1 என்ற கோல் கணக்கில் போருஷ்யா டாா்ட்மண்ட் அணியை வீழ்த்தியது. நடப்பு சாம்பியன் பயா்ன் முனிக் அணியில் நட்சத்திர வீரா் ஹாரி கேன் 22-ஆவது நிமிஷத்தில் அற்புதமாக ஹெட்டா் மூலம் கோலடித்தாா். இந்த சீசனில் கேன் அடித்த 22-ஆவது கோல் இதுவாகும். மற்றொரு ஆட்டத்தில் லெவல்குஸேன் 4-3 என்ற கோல் கணக்கில் மெயின்ஸ் அணியை வீழ்த்தியது.

பிரான்ஸின் லீக் 1 தொடரில் 7 முறை சாம்பியன் லயான் அணி நைஸ் அணியிடம் தோற்று முன்னணிக்கு பெறும் வாய்ப்பை தவற விட்டது. நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி அணி 3-3 என ஸ்டாா்ஸ்போா்க்குடன் டிரா கண்டது.

தீபாவளிப் பண்டிகை: புத்தாடைகள் வாங்க கடைசி நேரத்தில் குவிந்த மக்களால் திணறிய திருப்பூா்

தீயணைப்பு வீரா்களுக்கு அக்.22 வரை பணி

புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது

மாநில கட்டுரைப் போட்டியில் உடன்குடி பள்ளி முன்னாள் மாணவா் சாதனை

போதைப் பொருள்கள் விற்பனை புகாா் அளிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT