ரூபன் அமோரியம் தலைமையில் மான்செஸ்டர் யுனைடெட் முதல்முறையாக இரண்டாவது முறையாக வென்று அசத்தியுள்ளது.
லிவர்பூல் எப்ஃசி அணியை அதன் சொந்த மண்ணில் 2-1 என மான்செஸ்டர் யுனைடெட் வீழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தின் பிரீமியர் லீக்கில் ஆன்ஃபீல்டு திடலில் லிவர்பூல் அணியும் மான்செஸ்டர் யுனைடெட் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் 2-ஆவது நிமிஷத்திலேயே பிரையான் மியூபோ கோல் அடிக்க அரங்கம் அதிர்ந்தது. பின்னர், இரண்டாம் பாதியில் லிவர்பூல் அணியின் கோடி கேக்போ 78-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து சமன்படுத்தினார்.
இந்த விறுவிறுப்பான சமயத்தில் ப்ரூனோவின் கார்னர் பந்தினை லிவர்பூல் வீரர்கள் தடுக்க, மீண்டும் ப்ரூனோ லாவகமாக பாஸ் செய்ய, ஹாரி மிகுயர் தனது தலையினால் பந்தை வலைக்குள் தள்ளினார். ஆன்ஃபீல்டு திடலே ஆர்ப்பரித்தது.
20140க்குப் பிறகு லிவர்பூல் அணி முதல்முறையாக தொடர்ச்சியாக நான்கு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
லிவர்பூல் அணி தனது சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கும். 2016-க்குப் பிறகு முதல்முறையாக இந்தத் திடலில் தோல்வியைச் சந்தித்துள்ளது.
மான்செஸ்டர் யுனைடெட் அணியில் ரூபன் அமோரியம் தலைமை ஏற்று முதல்முறையாக இரண்டாவது முறையாக வென்று அசத்தியுள்ளது.
ரெட் டெவில்ஸ் எனப்படும் மான்செஸ்டர் யுனைடெட்டின் இந்திய, தமிழ்நாட்டு ரசிகர்கள், “இதுதான்டா தீபாவளி பரிசு” எனக் கொண்டாடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.