சூப்பர் லீக் கேரளாவில் மலப்புரம் எஃப்சி அணியின் ரசிகர்களின் விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
இங்கிலாந்தின் பிரீமியர் லீக்கில் இருப்பதுபோல கால்பந்து ரசிகர்கள் மழையிலும் போட்டியை ரசித்த விடியோ மக்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.
கடந்த 2023 முதல் சூப்பர் லீக் கேரளா கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் நேற்றிரவு மலப்புரம் எஃப்சியும் கோழிக்கூடு எஃப்சியும் மோதின.
நடப்பு சாம்பியனான கோழிக்கூடு அணியை எதிர்த்து, தனது சொந்த மண்ணில் மலப்புரம் விளையாடியது.
கொட்டும் மழையில் மிகவும் பரபரப்பாகச் சென்ற இந்தப் போட்டி 3-3 என சமனில் முடிந்தது.
மலப்புரம் அணி 56 சதவிகித பந்தினை தன் வசம் வைத்திருந்தது. 10 முறை இலக்கை நோக்கி அடித்ததில் 3 முறை மட்டுமே கோலாக மாறியது.
மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி நகரில் பைய்யானாடு திடலில் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்தத் திடலில் 30,000 பேர் பார்க்கும்படி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொட்டும் மழையில் இந்தப் போட்டியைப் பார்க்க வந்த கால்பந்து ரசிகர்களைக் குறித்து வர்ணனையில் அசத்திய விடியோதான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கிரிக்கெட் அளவுக்கு கால்பந்து புகழ்பெறாமல் இருந்தாலும் கொல்கத்தா, கேரளா, வட சென்னை, வட கிழக்கு மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றன.
உலக அரங்கில் விரைவில் இந்திய கால்பந்து அணி சாதனைகளை படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.