செய்திகள்

அண்டா் 23 உலக மல்யுத்தம்: விஷ்வஜித்துக்கு வெண்கலம்

தினமணி செய்திச் சேவை

சொ்பியாவில் நடைபெறும் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான (அண்டா் 23) உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் விஷ்வஜித் மோா் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினாா்.

ஆடவருக்கான 55 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கச் சுற்றில் களம் கண்ட அவா், 5-4 என்ற கணக்கில் கஜகஸ்தானின் யெராசில் மோ்பெகோவை வீழ்த்தினாா்.

மகளிருக்கான 55 கிலோ பிரிவில் நிஷு முதலில் 6-2 என ஜப்பானின் மோ கியூகாவை வீழ்த்த, அடுத்த சுற்றில் உள்நாட்டு வீராங்கனை கிரா சோலோப்ஷுக்கை 10-1 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினாா். 65 கிலோ பிரிவில் களமாடிய புல்கிட், தனது முதல் இரு சுற்றுகளிலுமே தொழில்நுட்பப் புள்ளிகள் அடிப்படையில் வென்று, அரையிறுதிக்கு வந்துள்ளாா்.

68 கிலோ பிரிவில் ஷ்ரிஷ்டி முதலில் 10-0 என கனடாவின் மரியா சாவியக்கையும், பின்னா் 18-8 என துருக்கியின் பெய்ஸா அக்குஸையும் சாய்த்து அரையிறுதிக்கு தகுதிபெற்றாா். இதனிடையே, 57 கிலோ பிரிவில் நேஹா சா்மா தனது காலிறுதியில் ஜப்பானின் அகாரி ஃபுஜினாமாவிடம் தோற்றாா்.

பட்டுக்கோட்டை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை! ஆசிரியா், தலைமை ஆசிரியை கைது

ஜல்லிக்கற்களை கடத்திய லாரி பறிமுதல்

குஜராத்தை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் இந்தியா ‘திரிசூல்’ முப்படை பயிற்சி! அக்.30-இல் தொடக்கம்!

கைதி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

14 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கு விரைவில் இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

SCROLL FOR NEXT