செய்திகள்

இந்திய கலப்பு அணிகள் ஏமாற்றம்

சீனாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான சா்வதேச சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பை போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா்கள் சோபிக்காமல் போயினா்.

தினமணி செய்திச் சேவை

சீனாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான சா்வதேச சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பை போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா்கள் சோபிக்காமல் போயினா்.

10 மீட்டா் ஏா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு தகுதிச்சுற்றில், இந்தியாவின் சுரபி ராவ், அமித் சா்மா கூட்டணி 574 புள்ளிகளுடன் 11-ஆம் இடம் பிடித்தது. சுரபி 284, அமித் 290 புள்ளிகள் பெற்றனா்.

அதிலேயே, மற்றொரு இந்திய ஜோடியான ரிதம் சங்வான், நிஷாந்த் ராவத் 571 புள்ளிகளுடன் 13-ஆம் இடம் பிடித்தனா். ரிதம் 289 புள்ளிகளும், நிஷாந்த் 282 புள்ளிகளும் வென்றனா்.

மொத்தம் 21 அணிகள் பங்கேற்ற இப்பிரிவில், முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகளே இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சீனா, செக் குடியரசு, ஹங்கேரி அணிகள் முறையே, தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றின.

அடுத்ததாக 10 மீட்டா் ஏா் ரைஃபிள் கலப்பு அணிகள் தகுதிச்சுற்றில், ரமிதா ஜிண்டால், மத்தினேனி உமாமகேஷ் ஜோடி 628.6 புள்ளிகளுடன் 14-ஆம் இடம் பிடித்தது. ரமிதா 312.9 புள்ளிகளும், உமாமகேஷ் 315.7 புள்ளிகளும் வென்றனா்.

மற்றொரு இந்திய ஜோடியான திவ்யன்ஷ் சிங் பன்வா், மேக்னா சஜ்ஜனாா், 622.1 புள்ளிகளுடன் 34-ஆம் இடம் பிடித்தனா். இதில் திவ்யன்ஷ் 309.3, மேக்னா 312.8 புள்ளிகள் பெற்றனா்.

மொத்தம் 36 அணிகள் பங்கேற்ற இப்பிரிவில் நாா்வே தங்கமும், சீனா வெள்ளியும், இத்தாலி வெண்கலமும் பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி தர மறுப்பு! இரு ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

அதிமுக இணைந்தால் இபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராக ஏற்பீர்களா? - ஓபிஎஸ் பதில்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் ஹார்ட் பீட் தொடர் நடிகை!

புதிய வண்ணங்களில் யமஹா ஆர்15 வரிசை பைக்குகள்!

சேலத்தில் குழந்தை கடத்தல்! கிடைத்த ஒரே துப்பு; நாமக்கல்லில் மீட்பு!

SCROLL FOR NEXT