செய்திகள்

இறுதிச்சுற்று முனைப்பில் பவேஷ் ஷெகாவத்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டர் ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் பவேஷ் ஷெகாவத் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறும் முனைப்பில் உள்ளார்.

தினமணி செய்திச் சேவை

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டர் ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் பவேஷ் ஷெகாவத் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறும் முனைப்பில் உள்ளார்.

இந்தப் பிரிவு தகுதிச்சுற்றின் முதல்நிலை முடிவில் அவர், 293 புள்ளிகளுடன் 4-ஆம் இடத்தில் இருக்கிறார். இதன் 2-ஆம் நிலை சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதே பிரிவில் களம் கண்ட மற்ற இந்தியர்களான பிரதீப் சிங் ஷெகாவத் 288 புள்ளிகளுடன் 24-ஆம் இடமும், குர்மீத் 284 புள்ளிகளுடன் 32-ஆம் இடமும், ராஜ்வர்தன் பாட்டீல் 277 புள்ளிகளுடன் 40-ஆம் இடமும், மன்தீப் சிங் 272 புள்ளிகளுடன் 43-ஆம் இடமும் பிடித்து பின்னடைவை சந்தித்தனர்.

இதனிடையே, 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் மகளிர் தனிநபர் பிரிவு தகுதிச்சுற்றில், மெஹுலி கோஷ் 583 புள்ளிகளுடன் 23-ஆம் இடமும், மனினி கெüஷிக் 580 புள்ளிகளுடன் 45-ஆம் இடமும், சுரபி பரத்வாஜ் 578 புள்ளிகளுடன் 52-ஆம் இடமும் பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தனர்.

இப்பிரிவில் முதல் 8 இடங்களைப் பிடிப்போரே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும். இதிலேயே, ரேங்கிங் புள்ளிகளுக்காக பங்கேற்ற இந்தியாவின் விதர்சா வினோத் 585 புள்ளிகளுடன் 14-ஆம் இடமும், ஆயுஷி போடர் 582 புள்ளிகளுடன் 28-ஆம் இடமும் பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் பிரசாரம்: திருச்சியில் தவெக தலைவர் விஜய்! குவிந்த தொண்டர்கள்!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

யுபிஐ பணப்பரிவர்த்தனை செயல்படுவது எப்படி?

திண்டுக்கல் அருகே பஞ்சு ஆலையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்

ஆளத்தொடங்குகிறதா செய்யறிவு? அல்பேனியாவில் முதல் ஏஐ அமைச்சர் டெய்லா யார்?

SCROLL FOR NEXT