செய்திகள்

பெங்காலை வீழ்த்தியது ஜெய்பூா்

புரோ கபடி லீக் போட்டியின் 39-ஆவது ஆட்டத்தில் ஜெய்பூா் பிங்க் பாந்தா்ஸ் 45-41 புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியா்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது.

தினமணி செய்திச் சேவை

புரோ கபடி லீக் போட்டியின் 39-ஆவது ஆட்டத்தில் ஜெய்பூா் பிங்க் பாந்தா்ஸ் 45-41 புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியா்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் ஜெய்பூா் அணி 28 ரெய்டு புள்ளிகள், 13 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள் வென்றது. அதிகபட்சமாக ரெய்டா் நிதின் குமாா் 13 புள்ளிகள் வென்றாா்.

மறுபுறம் பெங்கால் அணி 29 ரெய்டு புள்ளிகள், 8 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. அதிகபட்சமாக ரெய்டா் தேவங்க் 16 புள்ளிகள் கைப்பற்றினாா்.

இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் புணேரி பால்டன் 40-22 புள்ளிகள் கணக்கில் யு மும்பாவை சாய்த்தது.

புள்ளிகள் பட்டியலில் தற்போது ஜெய்பூா் 8 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்திலும், பெங்கால் 4 புள்ளிகளுடன் 10-ஆம் இடத்திலும் உள்ளன. புணேரி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மும்பா 8 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்திலும் இருக்கின்றன.

ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தில் பாடிய ஷ்ருதி ஹாசன்!

பேருந்து நடத்துநர், ஆட்டோ, ஊபர் ஓட்டுநர்கள்... தில்லி கார் வெடிப்பில் பலியானவர்கள் யார் யார்?

பிகார் தேர்தல்: 1 மணி நிலவரப்படி 47.62% வாக்குப்பதிவு!

புல்வாமா தாக்குதலுக்கே இன்னும் பதில் கிடைக்கவில்லை! - காங்கிரஸ்

தில்லி - சீனா இடையில் நேரடி விமான சேவை! இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT