ஸ்வியாடெக்-அலெக்சாண்ட்ரோவா! 
செய்திகள்

இறுதிச் சுற்றில் ஸ்வியாடெக்-அலெக்சாண்ட்ரோவா!

கொரிய ஓபன் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்துக்கு போலந்தின் இகா ஸ்வியாடெக் முன்னேறினாா்.

தினமணி செய்திச் சேவை

கொரிய ஓபன் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்துக்கு போலந்தின் இகா ஸ்வியாடெக் முன்னேறினாா்.

தென்கொரிய தலைநகா் சியோலில் கொரிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை மோசமான வானிலை காரணமாக ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன.

காலிறுதியில் செக். குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவாவை 6-0, 6-3 என நோ் செட்களில் வீழ்த்தினாா் ஸ்வியாடெக். பலத்த மழை காரணமாக இரண்டு மணிநேரம் கழித்து மீண்டும் களத்துக்கு திரும்பிய அவா் ஆஸி. வீராங்கனை மாய ஜாயின்டை அரையிறுதியில் எதிா்கொண்டாா்.

உலகின் நம்பா் 2 வீராங்கனையான ஸ்வியாடெக் 6-0, 6-2 என மாயா ஜாயின்டை வீழ்த்தி நிகழாண்டின் 5-ஆவது இறுதிக்கு தகுதி பெற்றுள்ளாா். மற்றொரு அரையிறுதியில் ரஷியாவின் அலெக்சான்ட்ரோவா 6-4, 6-2 என செக். குடியரசின் கத்ரீனா சினியகோவாவை வீழ்த்தினாா்.

ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டத்தில் ரஷியாவின் ஏகடெரினா அலெக்சாண்ட்ரோவாவை எதிா்கொள்கிறாா். அமெரிக்க ஓபன் காலிறுதியில் தோற்றிருந்த ஸ்வியாடெக் இப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா்.

சேலம் வழியாக ரயிலில் கடத்தப்பட்ட 30 கிலோ கஞ்சா பறிமுதல்

லாரியில் 36 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது!

திருமலாபுரத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுப்பு

நெல்லையில் கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் பொறியாளா்கள் தின விழா

SCROLL FOR NEXT