மகளிருக்கான தங்கப் பந்து விருதை பார்சிலோனாவின் கால்பந்து வீராங்கனை அய்டானா பொன்மட்டி வென்றுள்ளார்.
தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இந்த விருதினை வென்ற முதல் வீராங்கனை என்ற புதிய சாதனையை பொன்மட்டி படைத்துள்ளார்.
ஸ்பெயினைச் சேர்ந்த அய்டானா பொன்மட்டி (27 வயது) பார்சிலோன அணியில் விளையாடி வருகிறார்.
பார்சிலோனா உள்ளூரில் மூன்று சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியது. சிறப்பாக விளையாடிய இவர் இந்தாண்டுக்கான தங்கப் பந்து விருதை வென்றுள்ளார்.
ஏற்கெனவே, இவர் கடந்த 2023, 2024-ஆம் ஆண்டுகளில் வென்று அசத்தியுள்ளார்.
மகளிருக்கான யூரோ சாம்பியன்ஷிப்பில் ஸ்பெயினை முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு அழைத்துச்சென்று அசத்தினார்.
மகளிருக்கான சாம்பியன்ஸ் லீக்கிலும் இவரது அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
மகளிர் பேலந்தோர் தரவரிசை
1. அய்டானா பொன்மட்டி (பார்சிலோனா)
2. மரியோனா கால்டெண்டே (ஆர்செனல்)
3. அலெஸ்ஸியா ரூஸ்ஸோ (ஆர்செனல்)
4. அலெக்ஸியா புடெல்லாஸ் (பார்சிலோனா)
5. சோலே கெல்லி (ஆர்செனல்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.