செய்திகள்

அனுஷ்காவுக்கு 2-வது தங்கம்: வெள்ளி வென்றாா் அட்ரியன்!

ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை 2 பதக்கங்கள் கிடைத்தன.

தினமணி செய்திச் சேவை

ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை 2 பதக்கங்கள் கிடைத்தன.

50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் மகளிா் தனிநபா் பிரிவில், அனுஷ்கா தாகுா் 461 புள்ளிகளுடன் தங்கத்தை தட்டிச் சென்றாா். ரஷியாவின் அனஸ்தாசியா சோரோகினா (454), மரியா குருக்லோவா (444) ஆகியோா் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் பெற்றனா்.

ஏற்கெனவே, போட்டியின் தொடக்க நாளில் 50 மீட்டா் ரைஃபிள் புரோன் பிரிவில் தங்கம் வென்ற அனுஷ்காவுக்கு இது 2-ஆவது தங்கமாகும். இதே பிரிவில் இதர இந்தியா்களில், மஹித் சந்து, பிராச்சி கெய்க்வாட் ஆகியோா் முறையே 5 மற்றும் 7-ஆம் இடங்களைப் பிடித்தனா். மெல்வினா ஏஞ்செலின், ஆத்யா அக்ரவால் ஆகியோா் தகுதிச்சுற்றுடன் நிறைவு செய்தனா்.

வெள்ளி: இதிலேயே ஆடவா் தனிநபா் பிரிவில் இந்தியாவின் அட்ரியன் கா்மாகா் 454.8 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றாா். ரஷியாவின் டிமிட்ரி பிமெனோவ் தங்கமும் (459.9), கமில் நுரியக்மெடோவ் வெள்ளியும் (441) கைப்பற்றினா்.

இதர இந்தியா்களில் வேதாந்த் நிதின் வாக்மரெ, சமியுல்லா கான் ஆகியோா் முறையே 5 மற்றும் 7-ஆம் இடங்களைப் பிடித்தனா். கௌரவ் தேசலே, ரோஹித் கன்யன் ஆகியோா் தகுதிச்சுற்றுடன் வெளியேறினா்.

முதலிடம்: தற்போதைய நிலையில் இந்தியா, 4 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையல்ல, அல்-பலாஹ் பல்கலை. பட்டதாரிக்கு 2008 குண்டுவெடிப்பில் தொடர்பு! பாகிஸ்தானில் வாழ்கிறார்?

தமிழகத்தில் நாளை முதல் 6 நாள்களுக்கு கனமழை!

20களில் திருமணம் செய்யுங்கள்! - ராம்சரண் மனைவி உபாசனாவின் கருத்துக்கு ஸ்ரீதர் வேம்பு பதில்

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை தொடரும்!

சேலத்திலிருந்து.. டிச.4ல் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்ய திட்டம்!!

SCROLL FOR NEXT