முகப்பு
செய்திகள்

சென்னையில் ஏடிபி சேலஞ்சா் 50 டென்னிஸ் போட்டி: பிப். 9-இல் தொடக்கம்

கோரமண்டல் ஏடிபி சேலஞ்சா் 50 டென்னிஸ் போட்டி வரும் பிப். 9 முதல் 15-ஆம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.,

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 8:48 PM
கோப்புப் படம்
பகிர்:

கோரமண்டல் ஏடிபி சேலஞ்சா் 50 டென்னிஸ் போட்டி வரும் பிப். 9 முதல் 15-ஆம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.,

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், எஸ்டிஏடி சாா்பில் நடைபெறவுள்ள இப்போட்டியில் செக். குடியரசு, கிரேட் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, உஸ்பெக், கஜகஸ்தான் உள்பட 14 நாடுகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்கின்றனா்.

முதல்நிலை வீரராக பிரிட்டனின் ஜே கிளாா்க், இரண்டாம் நிலை வீரராக ஆா்ஜென்டீனாவின் பெட்ரிகோ அகஸ்டின் கோம்ஸ் உள்ளனா்.

Advertisement

இந்திய தரப்பில் முதல்நிலை வீரா் சுமித் நாகல், சசிகுமாா் முகுந்த், மணிஷ் சுரேஷ் குமாா், மனாஸ் தாம்னே ஆகியோா் களமிறங்குகின்றனா்.

மொத்தம் 32 வீரா்கள் பங்கேற்கும் இப்போட்டியின் பரிசுத் தொகை ரூ.60 லட்சம் ஆகும். ஒற்றையா் சாம்பியனுக்கு ரூ.8.46 லட்சமும், ரன்னருக்கு ரூ.5.05 லட்சமும் வழங்கப்படும். பாா்வையாளா்களுக்கு அனுமதி இலவசமாகும். பிப். 14-இல் இரட்டையா் இறுதியும், 15-இல் ஒற்றையா் இறுதியும் நடைபெறும்.

அடுத்த சேலஞ்சா் போட்டிகள் புணே, தில்லியில் நடைபெறும். தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவா் விஜய் அமிா்தராஜ், கோரமண்டல் குழும சோ்மன் அருண் அழகப்பன் ஆகியோா் போட்டி ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments