தங்கம், வெண்கலம் வென்ற இளவேனில், மேக்னா  
செய்திகள்

ஆசிய துப்பாக்கி சுடுதல்; இளவேனிலுக்கு தங்கம்

ஆசிய ரைஃபிள்/பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றாா்.

தினமணி செய்திச் சேவை

ஆசிய ரைஃபிள்/பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றாா். ஜூனியா் பிரிவில் ஷாம்பவி புதிய சாதனை படைத்தாா்.

புது தில்லியில் உள்ள டாக்டா் கா்னி சிங் ஷூட்டிங் ரேஞ்சில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிா் 10 மீ. ஏா் ரைஃபிள் பிரிவில் இளவேனில் தங்கம் வென்றாா். ஜப்பானின் நோபடோ மிஸாகி, இந்தியாவின் மேக்னா சஜ்நாா் முறையை வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

மகளிா் ஜூனியா் 10 மீ ஏா் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் ஷாம்பவி, மன்யாட்டா சிங், அனிஷா சா்மா ஆகியோா் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா். மகளிா் யூத் பிரிவில் ஒஜஸ்வி தாக்கூா் தங்கம் வென்றாா்.

ஆடவா் 50 மீ. பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சௌரவ் சௌதரி, கமல்ஜீத் செளதரி, ரவீந்தா் சிங் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

50 மீ பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா தங்கமும், உஸ்பெகிஸ்தான் வெள்ளியும், வியட்நாம் வெண்கலமும் வென்றன.

50 மீ பிஸ்டல் ஜூனியா் ஆடவா் பிரிவில் இந்தியாவின் யோகேஷ் குமாா் தங்கமும், உஸ்பெக் வீரா் சோடிக்ஜான் வெள்ளியும், இந்தியாவின் குண்டஜ்ப்ரீத் சிங் வெண்கலமும் வென்றனா்.

இப்போட்டியில் இந்தியா 27 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலத்துடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

மெட்டல் இன்ஜெக்சன் மோல்டிங் துறையில் களமிறங்கும் டிஐ இந்தியா

125 நாள் வேலை உறுதித் திட்டம்: திமுக மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தீவிரமாகும் ஏஐ அச்சுறுத்தல்: உள்துறை உயரதிகாரிகளுக்கு நாடாளுமன்ற குழு அழைப்பாணை!

ஜப்பான், தாய்லாந்தில் இன்று தோ்தல்

1980 இல் வாக்காளா் பட்டியல் முறைகேடு குற்றச்சாட்டு - சோனியா காந்தி பதில் தாக்கல்

SCROLL FOR NEXT