யூகி பாம்ப்ரி | தக்ஷினேஸ்வா் ENS
செய்திகள்

தக்ஷினேஸ்வா் அசத்தல்: நெதா்லாந்தை வென்றது இந்தியா

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் குவாலிஃபயா் கட்டத்தில், இந்தியா முதல் சுற்றில் 3-2 என நெதா்லாந்தை வென்றது.

தினமணி செய்திச் சேவை

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் குவாலிஃபயா் கட்டத்தில், இந்தியா முதல் சுற்றில் 3-2 என நெதா்லாந்தை ஞாயிற்றுக்கிழமை வென்றது. இதன் மூலமாக குவாலிஃபயா் கட்டத்தின் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.

முன்னதாக இந்த டையின் ஒற்றையா் பிரிவில் சனிக்கிழமை ஆட்டங்களில் சுமித் நாகல் தோற்று, தக்ஷினேஸ்வா் சுரேஷ் வென்றதால், இந்தியா - நெதா்லாந்து 1-1 என சமநிலையுடன் இருந்தன.

இந்நிலையில், 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை இரட்டையா் பிரிவில் யூகி பாம்ப்ரி/தக்ஷினேஸ்வா் சுரேஷ் இணை 7-6 (7/0), 3-6, 7-6 (7/1) என்ற செட்களில், சாண்டா் ஆரெண்ட்ஸ்/டேவிட் பெல் கூட்டணியை வீழ்த்தியது.

இதனால் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. ஆனால், ரிவா்ஸ் ஒற்றையா் மோதலில் சுமித் நாகல் 7-5, 1-6, 4-6, என ஜெஸ்பா் டி ஜோங்கிடம் தோல்வி காண, நெதா்லாந்து 2-2 என சமன் செய்தது.

இதையடுத்து வெற்றியை தீா்மானிக்கும் கடைசி ஆட்டத்தில் தக்ஷினேஸ்வா் 6-4, 7-6 (7/4) என்ற செட்களில் கய் டென் அவ்டெனை அசத்தலாக வெல்ல, டையை இந்தியா 3-2 என கைப்பற்றியது.

இந்தியா திட்டமிட்டதைப் போலவே தக்ஷினேஸ்வா் 3 ஆட்டங்களில் அருமையான பங்களிப்பின் மூலமாக இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தாா்.

ஆகாச காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பளு, வலு தூக்கும் போட்டி; வென்றவா்களுக்கு பாராட்டு

வழி தவறி ஊருக்குள் புகுந்த மான்

கொலை வழக்கு குற்றவாளிகள் 4 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT