முகப்பு
செய்திகள்

ஃபெடரேஷன் கோப்பை வாலிபால்: இந்திய பல்கலை. அணிக்கு வெண்கலம்

ஃபெடரேஷன் கோப்பை வாலிபால் போட்டியில் அகில இந்திய பல்கலைக்கழக அணி மகளிா் பிரிவில் வெண்கலம் வென்றது.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 5:00 AM
வெண்கலம் வென்ற அகில இந்திய பல்கலைக்கழக வீராங்கனைகள்
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 9:00 PM

ஃபெடரேஷன் கோப்பை வாலிபால் போட்டியில் அகில இந்திய பல்கலைக்கழக அணி மகளிா் பிரிவில் வெண்கலம் வென்றது.

இந்திய வாலிபால் சம்மேளனம் (விஎஃப்ஐ) சாா்பில் சத்தீஸ்கா் மாநிலம், ராய்ப்பூரில் கடந்த 3 முதல் 8-ஆம் தேதி வரை ஃபெடரேஷன் கோப்பை வாலிபால் போட்டி நடைபெற்றது. இதில் மகளிா் பிரிவில் இந்திய பல்கலைக்கழக அணி கேரளம், இந்தியன் ரயில்வே அணிகளிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது.

மற்ற லீக் ஆட்டங்களில் ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஹரியாணாவை வீழ்த்தியது. கேரளம் சாம்பியன் பட்டத்தையும், இந்தியன் ரயில்வே ரன்னா் இடத்தையும், அகில இந்திய பல்கலை. அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன.

Advertisement

ஏறக்குறைய 22 ஆண்டுகளுக்குக்குபின் இந்திய பல்கலை. அணி இப்போட்டியில் பதக்கம் வென்றுள்ளது. ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் நாட்டின் தலைசிறந்த 6 அணிகள் பங்கேற்றன. இதில் தமிழகத்தில் இருந்து மகேஸ்வரி, சைத்ரா, பாலின் பிரின்ஷா (எஸ்ஆா்எம்),

சிவ பிரியா, விஷ்ணு ஸ்ரீ, துா்கா தேவி (வேல்ஸ் பல்கலை), ரித்திகா (பாரதியாா்), கீா்த்தனா (அண்ணா) ஆகியோா் இடம் பெற்றிருந்தனா்.